கனவிலும்

கனவிலும்

எடுப்பு

கனவிலும் நினைக்கவில்லை கண்ணாளா

உனைப் பிரிவேன் என – கனவிலும்

தொடுப்பு

எனதுயிர் கண்மணியே தசரதன் மைந்தனே

உனதுயிர் நான் இங்கே தவிக்க எங்கு நீ தேடுகிறாயோ

முடிப்பு

பத்து தலை இராவணன் பித்து பிடித்து அலைகிறான்

ஏத்து உன் கோதண்டத்தை சாத்து அவன் மார்பினை நோக்கி

கனவிலும்

Prof. V.V. Meenakshi Jayakumar

Today’s special – new day – new life

NEW DAY – NEW LIFE – GET UP – WAKE UP – DO YOUR DUTY

 

காலைக் கதிரவன் உதித்து விட்டான்

கண்மணி நீயும் துயில் எழுவாய்

காத்துள்ள கடமைகளை நீ செய்வாய்

கந்தன் முருகன் அருள் புரிவான்

 

கீச்சு கீச்சுசென்று கூவும் குயில்கள்

குரல்களை கேட்டு துயில் எழுவாய்

பறவைகள் கூவுவது நமக்காக

பாயும் ஆறும் நமக்காக

நாளும் பிறந்தது நமக்காக – நவ

கோளும் இருப்பது நலம் பயக்க

புத்துணர்ச்சியுடன் எழுந்திடுவாய்

புதுநாள் வந்தது மகிழ்ந்திடுவாய்

தவற்றை திருத்திக் கொள்ள

தவமேற்ப்பாய் தசரதன் மைந்தன்

தயைபுரிவான் துணையும் வருவான்

எழுவாய் மகனே நீ எழுவாய்

எழுவாய் மகளே நீ எழுவாய்

  • Prof. V. V. Meenakshi Jayakumar

ராமர்

ராமர்

ramar

அயோத்தி அரசன் தசரதனாம்

ஆம் இவன் மிகவும் நல்லவனாம்

இராணியர் மூவர் இருந்தாலும்

ஈண்டு இன்னும் குழந்தை இல்லை

உண்மைத் துறவி ரிஷ்யசிங்கர்

ஊர்  போற்ற புத்ர யாகம் செய்தாரே

எண்ணியது அருளும் பாயாசமும்

ஏற்ற இராணியர் பருகினரே

ஐயன் நாரணன் இராமனாயும்

ஒப்பில்லா பரதனும் லட்சுமணனும்

ஓங்கு புகழ் கொண்ட சத்ருகனும்

ஔஷதம் போலே வந்துதித்தனர்

Prof. V. V. Meenakshi Jayakumar

Mangalam Ramar, Guru, Sivan and Hanuman

பல்லவி

மங்களம் மங்களம் சங்கர குருவிற்கு மங்களம்

செய மங்களம் சுப மங்களம் ஜெய மங்களம் என்றும் சுப மங்களம்

அனுபல்லவி

தங்கும் இன்பம் பேரின்பமாக

எங்கும் இனிமேல் மங்களம்

பங்கில் உமையை கொண்ட பரமன்

எங்கள் குறைதீர்க்க குருவாய் வந்தார் – மங்களம்

சரணம்

வீங்கிய தாடை உடைய அனுமன்

பாங்கிய அழகில் நின்ற அனுமன்

ஓங்கிய புகழை கொண்ட அனுமன்

தூங்கும் ஆன்மாவை எழுப்பும் அனுமன் – மங்களம்

  • Prof.V.V.Meenakshi Jayakumar