நெடுங்குண இராமர்

நெடுங்குண இராமர்

இராகம் : வசந்தா                           தாளம் : ஆதி

பல்லவி

நெஞ்சில் சின்முத்திரை காட்டும் இராமா

தஞ்சமென்று உனை அடைந்தேன் நெடுங்குண இராமா

நெஞ்சில்

அனுபல்லவி

வஞ்சமிலா மனம் கொண்ட உறவினைத் தருவாய்

பஞ்சம் பிணி ஏதுமின்றி உலகினைக் காப்பாய்-நெஞ்சில்

நெஞ்சில்

சரணம்

அஞ்சேல் நீ என்று அடைக்கலம் தருவாய்

வஞ்சிக் கொடி செங்கமல தாயாரின் தெய்வமே

சஞ்சலமற்ற தம்பி லட்சுமணன் உடன் இருக்க

அஞ்சனை மைந்தன் இராமாயணம் படிக்க

– நெஞ்சில் சின்முத்திரை

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

ராமர்

ராமர்

ramar

அயோத்தி அரசன் தசரதனாம்

ஆம் இவன் மிகவும் நல்லவனாம்

இராணியர் மூவர் இருந்தாலும்

ஈண்டு இன்னும் குழந்தை இல்லை

உண்மைத் துறவி ரிஷ்யசிங்கர்

ஊர்  போற்ற புத்ர யாகம் செய்தாரே

எண்ணியது அருளும் பாயாசமும்

ஏற்ற இராணியர் பருகினரே

ஐயன் நாரணன் இராமனாயும்

ஒப்பில்லா பரதனும் லட்சுமணனும்

ஓங்கு புகழ் கொண்ட சத்ருகனும்

ஔஷதம் போலே வந்துதித்தனர்

Prof. V. V. Meenakshi Jayakumar