நாகசதுர்த்தி

நாகசதுர்த்தி பாடல்

நாகசதுர்த்தி இன்று புத்துக்கு பால் விடுவோம்

நாகதோஷம் போகும் புத்துக்கு பால் விடுவோம்

நன்மை எல்லாம் சேரும் புத்துக்கு பால் விடுவோம்

நாளும் நலம் சேரும் புத்துக்கு பால் விடுவோம்

 

பாம்பும் கூட கடவுள் நமக்கு புத்துக்கு பால் விடுவோம்

பாவம் எல்லாம் தீரும் புத்துக்கு பால் விடுவோம்

பால் தந்தால் போதுமே பாம்பு தோஷம் தீருமே

பசும்பால் எடுத்துச்சென்று நாம் புத்துக்கு பால் விடுவோம்

பழம் தந்தால் போதுமே பழவினைகள் தீருமே

பழமையை மாற்றாமல் புத்துக்கு பால் விடுவோம்

 

பக்தியுடன் நம்பி சென்று நாக சதுர்த்தியான இன்று

புத்தியுடன் தான்நாமே புத்துக்கு பால் விடுவோம்

பரகதிக்கு நன்மை உண்டு இங்கேயும் சிறப்பு உண்டு

பழமையை மாற்றாமல் புத்துக்கு பால் விடுவோம்

புண்ணியமும் நிறைய வரும் புகழும் நிறைய வரும்

கண்ணியமும் நிறைய வரும் கடமை நமக்கு உண்டு

நாகசதுர்த்தி இன்று புத்துக்கு பால் விடுவோம்

பழமையை மாற்றாமல் புத்துக்கு பால் விடுவோம்

– பேரா.வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

திருஆடிப்பூரம்

திருஆடிப்பூரம் பாடல்

பல்லவி

திருஆடிப்பூரத்தில் உலகில் வந்தாள்

திருவில்லிப்புத்தூரில் உதித்து வந்தாள

–  வாழி

அனுபல்லவி

திருப்பாவை ஆண்டாளின் வாய்வேதம்

திருப்பாவை நோன்பு அவள் கை வேதம்

– வாழி

 

சரணம்

பெரியாழ்வார் மகளாய் வளர்ந்து வந்தாள்

பெரிய உரை நமக்குச் சொல்லித் தந்தாள்

கரிய திருமாலினக்கு மாலை தந்தாள்

பெரிய திருவடி மீது பறந்து வந்தாள்

– திருஆடி

-பேரா.வே.வெ.மீனாட்சி ஜெயகுமார்