பாரதியே சரணம்

பாரதியே சரணம்

எடுப்பு

பாரதியே சரணம் – அம்மா கலை

பாரதியே சரணம்

தொடுப்பு

ஹாரதி எடுத்தோம் உனக்கு மாரதி நீயே

ஹாரதி எடுத்தோம்  உனக்கு மாரதி நீயே

சாரதியாய் இருந்து என் கலை வாழ்வை நடத்து நீயே

சாரதியாய் இருந்து கலை வாழ்வு நடத்து

முடிப்பு

அங்கத்தில் கலைகளை கொண்டவளே சரணம்

சங்கத்தில் திருவையும் கொண்டவளே சரணம்

திங்களைத் தலை கொண்ட நாயகி தோழியே

மங்களம் அளிப்பாய் நாரதன் தாயே சரணம்

Prof. V.V. Meenakshi Jayakumar

Mangalam Ramar, Guru, Sivan and Hanuman

பல்லவி

மங்களம் மங்களம் சங்கர குருவிற்கு மங்களம்

செய மங்களம் சுப மங்களம் ஜெய மங்களம் என்றும் சுப மங்களம்

அனுபல்லவி

தங்கும் இன்பம் பேரின்பமாக

எங்கும் இனிமேல் மங்களம்

பங்கில் உமையை கொண்ட பரமன்

எங்கள் குறைதீர்க்க குருவாய் வந்தார் – மங்களம்

சரணம்

வீங்கிய தாடை உடைய அனுமன்

பாங்கிய அழகில் நின்ற அனுமன்

ஓங்கிய புகழை கொண்ட அனுமன்

தூங்கும் ஆன்மாவை எழுப்பும் அனுமன் – மங்களம்

  • Prof.V.V.Meenakshi Jayakumar