மாரிமுத்தாப்பிள்ளை
அவதாரம் செய்தார் சிவபக்தர்
பவசாகரம் தனை நாம் கடக்க – அவதாரம் செய்தார் சிவபக்தர்
சிவயோகம் தனைபுரிந்து தவயோகத்தினில் நிறைந்து
உவட்டாத உபதேசம் செய்து
அவதாரம் செய்தார் சிவபக்தர்
Prof. V.V. Meenakshi Jayakumar
Articles on music, spirituality, self development and humor
மாரிமுத்தாப்பிள்ளை
அவதாரம் செய்தார் சிவபக்தர்
பவசாகரம் தனை நாம் கடக்க – அவதாரம் செய்தார் சிவபக்தர்
சிவயோகம் தனைபுரிந்து தவயோகத்தினில் நிறைந்து
உவட்டாத உபதேசம் செய்து
அவதாரம் செய்தார் சிவபக்தர்
Prof. V.V. Meenakshi Jayakumar
மின்னல்
எடுப்பு
மின்னல் போல் மறையும் வாழ்வில் ஏனோ மனக்குமறல்கள்
கன்னல் அன்பு கொண்டிடுவோம் கண்ணன் புகழ் பாடீயே
தொடுப்பு
அன்னையும் அப்பனும் ஒவ்வொரு பிறப்பாலும் வேறே
அன்பு கொண்ட மனைவியும் ஒவ்வொரு பிறப்பிலும் வேறே – மின்னல்
முடிப்பு
உள்ளமதில் அன்பு வைப்போம் வெள்ளை உள்ளம் கொண்டிடுவோம்
அள்ள அள்ள அன்பு தருவோம் கள்ள மனதை விரட்டுவோம்
Prof. V.V. Meenakshi Jayakumar
எங்கள் திருநாட்டில்
எடுப்பு
மலையருவி வந்து பாயும் எங்கள் திருநாடே
மடிமடியாய் பால் சுரக்கும் பசு உள்ள நாடே
தொடுப்பு
குலைகுலையாய் வாழை இருக்கும் எங்கள் திருநாடே
இடி இடியாய் முழவதிரும் எங்கள் திருநாடே
முடிப்பு
சுனைகளெல்லாம் தேன் சொரியும் சுரக்கும் எங்கள் நாடே
பனைகளெல்லாம் கள் சுரக்கும் எங்கள் திருநாடே
வினைகள் ஏதும் பழுக்காது எங்கள் திருநாடே
மனைகள் தோறும் மங்களமே எங்கள் திருநாடே
தோகைமயில் ஆடிடுமே எங்கள் திருநாட்டில்
வாகைமயில் கூவிடுமே எங்கள் திருநாட்டில்
ஆகையாலே அனைத்து வளம் எங்கள் திருநாட்டில்
சாகை தோறும் சந்தனமே எங்கள் திருநாட்டில்
குழலிசையும் வீணையிசையும் எங்கள் திருநாட்டில்
மழலைமொழி கேட்டிடுமே எங்கள் திருநாட்டில்
குரவையுடன் கூத்திடுவோம் எங்கள் திருநாட்டில்
அரனுடன் அரம்பை ஆடுவர் எங்கள் திருநாட்டில்
வீடெல்லாம் தேவாரம் எங்கள் திருநாட்டில்
நாடெல்லாம் தமிழிசையே எங்கள் திருநாட்டில்
பாடெல்லாம் பண்ணிசையே எங்கள் திருநாட்டில்
காடெல்லாம் கனி குலுங்கும் எங்கள் திருநாட்டில்
எங்கள் நாட்டின் பெருமை சொல்வேன் தங்கமே நீ கேள்
மங்களமே சூழ்ந்திருக்கும் அன்றும் இன்றும் என்றும்
அங்கயற்கண்ணி அருள் தருவாள் அன்றும் இன்றும் என்றும்
Prof. V.V. Meenakshi Jayakumar
வெற்றி வெற்றி வெற்றி
எடுப்பு
வெற்றி வெற்றி வெற்றி
கிட்டுமே நமக்கு
வெற்றி வெற்றி வெற்றி கிட்டுமே
தொடுப்பு
பற்றி பற்றி பற்றி நடப்போம் நல்லோர் வழியை
பற்றி பற்றி பற்றி நடப்போம் – என்றும்
முடிப்பு
முற்றும் துறந்த முனிவர் சொன்ன வழி
சற்றும் மனம் தளராமல் சொன்னபடி வாழ்ந்திடவே
வெற்றி வெற்றி கிட்டுமே நமக்கு
Prof. V.V. Meenakshi Jayakumar
கோள் சொல்லாதே பாப்பா
எடுப்பு
கோள் சொல்லாதே பாப்பா
கோள் சொல்லாதே
தொடுப்பு
ஆள் கொல்லி நோய்தான் பாப்பா – இது
ஆள் கொல்லி நோய் தான்
கோள் சொல்வது குடி கெடுக்கும் பாப்பா
குடி கெடுக்கும் – ஆகவே
கோள் சொல்லாதே பாப்பா
கோள் சொல்லாதே
முடிப்பு
தாள் பணிந்து வாழலாம் நல்லோர்
தாள் பணிந்து வாழலாம்
வாள் வீச்சினும் கொடிது பாப்பா
கோள் சொல்லி வாழ்வது
கோள் சொல்லாதே பாப்பா
கோள் சொல்லாதே
Prof. V.V. Meenakshi Jayakumar
கதிரவன் கவசம்
ஞான ஆசிரியன் நீயே ஞாயிறு தேவா
ஞான ஆசிரியன் நீயே
மோனமாய் கல்வி புகட்டும் சிவனின் ரூபம் நீயே
கானமாய் கலைகள் அருளும் கண்ணனின் ரூபம் நீயே
ஆன சுகம் தந்திடுவாய் தன் பாதிரி ரூபம் நீயே – சுப
மான எல்லாம் தந்தே அருளும் ஆரோக்கிய தேவன் நீயே
Prof. V.V. Meenakshi Jayakumar
ஆதவனைப் போற்றிடுவோம்
ஞாயிறு போற்றுதுல்
எடுப்பு
கண் கண்ட தெய்வமே கலியுக வரதே
கதிரவா உமக்கு எம் வணக்கம்
தொடுப்பு
விண்ணாளும் வேந்தன் நீ வேதாந்த ரூபன் நீ
கதிரவா உமக்கு எம் வணக்கம்
முடிப்பு
மண் தழைக்க மழை அருள்வாய் வாழ்க நீயே
கண் செழிக்க வரம் அருள்வாய் வாழ்க நீயே
தண் நிகர் குளிர் மதி வருமே உன்னாலே
பண் கொண்டு பாடுகிறோம் அருள்வாய் நீயே
Prof. V.V. Meenakshi Jayakumar
இராவணன்
எடுப்பு
இராவணன்
மூவுலகின் மன்னன் நானடி சீதாதேவி நீ கேள்
மூவுலகின் மன்னன் நானடி
தொடுப்பு
ஏவும் பணியாட்கள் கோடி
ஏனிந்த கோபம் வாடி
காவு கொள்வேன் எனை எதிர்ப்போரை
காணு கொஞ்சம் எந்தன் முகமே
மூவுலகின்
முடிப்பு
யானை எட்டினை வென்றவன் நானே
மானை அனுப்பியே மயக்கினேன் உன்னை
பானை வயிறு கும்பகர்ணன் என் தம்பி
ஏனைய சொல்லி என் பயன்? இதோ பார்.
Prof. V.V. Meenakshi Jayakumar
கனவிலும்
எடுப்பு
கனவிலும் நினைக்கவில்லை கண்ணாளா
உனைப் பிரிவேன் என – கனவிலும்
தொடுப்பு
எனதுயிர் கண்மணியே தசரதன் மைந்தனே
உனதுயிர் நான் இங்கே தவிக்க எங்கு நீ தேடுகிறாயோ
முடிப்பு
பத்து தலை இராவணன் பித்து பிடித்து அலைகிறான்
ஏத்து உன் கோதண்டத்தை சாத்து அவன் மார்பினை நோக்கி
கனவிலும்
Prof. V.V. Meenakshi Jayakumar
எங்கே காண்பேன் என் இனிய ஜானகியை
எடுப்பு
எங்கே காண்பேன் என் இனிய ஜானகியை
மங்கையரில் புகழ் கொண்ட இனிய ஜானகியை
தொடுப்பு
அங்கே இங்கே தேடி இளைத்தேன்
சங்கு போன்ற கழுத்தை உடைய ஜானகியை
எங்கே
முடிப்பு
பங்கு வேண்டாம் இராஜ்ஜியத்தில்
பாங்குடைய என் ஜானகி போதும்
பொங்கும் இன்பம் தேடி வரும்
வீங்கிள வேனில் போன்ற என் ஜானகி வந்தால் கண்டால் போதும்
Prof. V.V. Meenakshi Jayakumar