கதிரவன் கவசம்

கதிரவன் கவசம்

ஞான ஆசிரியன் நீயே ஞாயிறு தேவா

ஞான ஆசிரியன் நீயே

மோனமாய் கல்வி  புகட்டும் சிவனின் ரூபம் நீயே

கானமாய் கலைகள் அருளும் கண்ணனின் ரூபம்  நீயே

ஆன சுகம் தந்திடுவாய் தன் பாதிரி ரூபம் நீயே – சுப

மான எல்லாம் தந்தே அருளும் ஆரோக்கிய தேவன் நீயே

Prof. V.V. Meenakshi Jayakumar

கண்ணன்

கண்ணன்

kannan flute

கண்ணன் கையில் குழலாவேன் – நான்

கண்ணன் கையில் குழலாவேன் – என்

எண்ணங்கள் அனைத்தையும் அவனிடம் தந்து

குழலைப் போல் நான் உள்ளொன்றும் கொள்ளேன்

 

மண்ணைத் தின்று உலகம் படைப்பான் – என்

மனதைத் தின்று உவகை கொள்வான்

பண் கொண்டு பாடும் எந்தன் குரலில்

தேனாய் வந்து இனிமை கொடுப்பான்

 

விண்ணையும் மண்ணையும் காலால் அளப்பான்

வீணையில் இசையாய் என் வசம் வருவான்

அண்டமும் பிண்டமும் அவனே என்ற

உண்மையை எனக்கு அனுதினம் உரைப்பான்

Prof. V. V. Meenakshi Jayakumar

கண்ணன் பிறந்த நாள் விழா

கண்ணன் பிறந்த நாள் விழா

kannan

அஷ்டமி நாள் பார்த்து அவதரித்தான் கண்ணன்…..

ஆதி நாராயணனே இங்கு வந்தான்.

இசைக்குழல் கொண்டு வந்தான்.

ஈடில்லா நாதம் தந்தான்..

உலகினில் உத்தம காதலனாக நின்றான்

ஊர்கோடி யமுனையில் கோபியர் தாபம் தீர்த்தான்

எண்குணம் படைத்தவன் துவாரகையில் அமர்ந்தான்

ஏழுலகை வென்று .. அவன் வேப்பமரமாகியுள்ளான்…..

ஐயமற கீதை சொன்னான்..அதர்மத்தை அழிக்க..

ஒன்றே பரம் என்றே நின்றான்  விட்டலன் ஆனான்

ஓசைஒலி எல்லாம் அவனே…கண்ணன் என்பவன்..

ஔவை தெய்வமாம் முருகன் மாமனவன்

காஞ்சி மஹா பெரியவர் கருத்தில் நின்றவன்

காஞ்சி மஹா பெரியவர் கருத்தில் நின்றவன்

அவரின்  தெய்வத்தின் குரலாய் என்றும் எழுத்தில் நிற்பவன்.. கண்ணன்…

Prof. V. V. Meenakshi Jayakumar

விநாயகா

விநாயகா

vinayaga

எடுப்பு

எனையாள உடனே நீ வா விநாயகா

எனையாள உடனே நீ வா

 

தொடுப்பு

உமையவள் மைந்தனே ஓங்கு புகழ் பெற்றவனே

எமைக்காத்து அருளவே வேலுடன் நீயும் வருவாயே

 

முடிப்பு

இமையோர்கள் நாயகனே ஏனிந்த ஏற்றத்தாழ்வு

அமைதியின் வடிவனே சாந்த சொரூபனே

தமைச்சேர்ந்த அடியவர்தம் வினைத் தீர்க்கும் – விநாயகனே

சமையலில் நேர்த்தியும் சுவையும் தந்தருள்வாயே

 

உன்னை நம்பும் எனைக் காத்து

அருள்வாயே ஆண்டவனே

புன்னை மர தரு நிழலில் உள்ள

பன்னக சயனனே

தன்மையில் நானும் ஒரு சூரபத்மன் தானே

கண்மணி எனை நீ காத்து அருள்வாயே

கன்னம் அழகு கொண்ட லஷ்மியின் நாயகனே

இன்னும் ஒரு பிறவி இல்லாமல் அருள்வாயே

இன்னும் ஒரு பிறவி இல்லாமல் அருள்வாயே

Prof. V. V. Meenakshi Jayakumar