ஆதவனைப் போற்றிடுவோம்

ஆதவனைப் போற்றிடுவோம்

ஞாயிறு போற்றுதுல்

எடுப்பு

கண் கண்ட தெய்வமே கலியுக வரதே

கதிரவா உமக்கு எம் வணக்கம்

தொடுப்பு

விண்ணாளும் வேந்தன் நீ வேதாந்த ரூபன் நீ

கதிரவா உமக்கு எம் வணக்கம்

முடிப்பு

மண் தழைக்க மழை அருள்வாய் வாழ்க நீயே

கண் செழிக்க வரம் அருள்வாய் வாழ்க நீயே

தண் நிகர் குளிர் மதி வருமே உன்னாலே

பண் கொண்டு பாடுகிறோம் அருள்வாய் நீயே

Prof. V.V. Meenakshi Jayakumar

மரம்

மரம் வளர்ப்போமே

1 maram

எடுப்பு

மரம் வளர்ப்போமே – நாம் மரம் வளர்ப்போமே

மழை பெறவே நாம் மரம் வளர்ப்போமே

– மரம்

தொடுப்பு

மரங்கள் வாழ முடியும் மனிதர் இல்லாமல்

மக்கள் வாழ முடியுமோ மரங்கள் இல்லாமல்

-மரம்

முடிப்பு

இன்னிசை ஓசை தரும் மரங்களை நாம் வளர்ப்போம்

அன்னை இயற்கை தந்தருளிய மரங்களையே நாம் வளர்ப்போம்

தென்னை போன்ற உயர்ந்து வாழ மரங்களையே நாம் வளர்ப்போம்

தன்னுடைய வாழ்வினையே நமக்கு தரும் மரங்களை வளர்த்து                                                                                                                      வணங்கி  போற்றுவோம்!!

-மரம்

Prof. V.V. Meenakshi Jayakumar

food for thought – mazhai

Dear all  namaste.

mazhi.. mazhi , mazhi

More Days of Heavy Rain - Conservation in a Changing Climate

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்

நாமநீர்  வேலி யுலகிற் கவனளி போல்

மேல்நின்று தான் சுரத்த லான்.

  • சிலப்பதிகாரம், மங்களவாழ்த்து 7-9

மழையைப் போற்றுவோம்

மழையைப் போற்றுவோம்,

கடல் சூழ்ந்த உலகிற்கு அவன் கருணை செய்யுமாறு போல் மாறாது மேலாய் நின்று தனது பொழிவால் வளத்தைச் சுரப்பதால்.