மின்னல்

மின்னல்

எடுப்பு

மின்னல் போல் மறையும் வாழ்வில் ஏனோ மனக்குமறல்கள்

கன்னல் அன்பு கொண்டிடுவோம் கண்ணன் புகழ் பாடீயே

தொடுப்பு

அன்னையும் அப்பனும் ஒவ்வொரு பிறப்பாலும் வேறே

அன்பு கொண்ட மனைவியும் ஒவ்வொரு பிறப்பிலும் வேறே – மின்னல்

முடிப்பு

உள்ளமதில் அன்பு வைப்போம் வெள்ளை உள்ளம் கொண்டிடுவோம்

அள்ள அள்ள அன்பு தருவோம் கள்ள மனதை விரட்டுவோம்

Prof. V.V. Meenakshi Jayakumar

மரம்

மரம் வளர்ப்போமே

1 maram

எடுப்பு

மரம் வளர்ப்போமே – நாம் மரம் வளர்ப்போமே

மழை பெறவே நாம் மரம் வளர்ப்போமே

– மரம்

தொடுப்பு

மரங்கள் வாழ முடியும் மனிதர் இல்லாமல்

மக்கள் வாழ முடியுமோ மரங்கள் இல்லாமல்

-மரம்

முடிப்பு

இன்னிசை ஓசை தரும் மரங்களை நாம் வளர்ப்போம்

அன்னை இயற்கை தந்தருளிய மரங்களையே நாம் வளர்ப்போம்

தென்னை போன்ற உயர்ந்து வாழ மரங்களையே நாம் வளர்ப்போம்

தன்னுடைய வாழ்வினையே நமக்கு தரும் மரங்களை வளர்த்து                                                                                                                      வணங்கி  போற்றுவோம்!!

-மரம்

Prof. V.V. Meenakshi Jayakumar

அன்னபூரணி

Annapoorani

அன்னபூரணி யின் அழகே.. அழகு..

ஆதி சிவனுக்கு அன்னமிட்ட கையழகி

இவ்வுலக நாதனின் தேவியவள்

ஈகைக்கு எடுத்துக்காட்டவள்

உண்டி கொடுத்தோரை உயிர் கொடுப்போர் ஆக்குபவள்

ஊன்உடலுக்கு உறுதுணையானவள்

என்றும் என்றென்றும் நம் அன்னையவள்

ஏழு ஜென்ம பாவம் தீர்க்கும் தங்க அன்னபூரணி தரிசனம்

ஐங்கரன் துண்டி விநாயகர் தாயவள்

ஒரு விசாலாக்ஷியாகவும் வடிவெடுத்தவள்

ஓராறு முகனின் தாயுமானவள்

ஔவை தெய்வம் வடிவில் வந்த காஞ்சி மஹா பெரியவர் அருள் நம்மை என்றும் காக்கட்டும்.

Prof. V. V. Meenakshi Jayakumar

ANNAI ABHIRAMAI

அபிராமி

அபிராமி பட்டருக்கு அருளிய அபிராமி

ஆற்றல் பல தருபவள் அபிராமி

இனிய வீணை இசைப்பவள் அபிராமி

ஈசனில் பாதியவள் அபிராமி

உலகளந்த நாயகி தான் அபிராமி

ஊக்கம் தரும் தெய்வமள்  அபிராமி

எங்கிருக்கும் சத்தியவள்  அபிராமி

ஏழிசையைத் தருபவள்  தான் அபிராமி

ஐங்கரனின் தாயானவள் அபிராமி

ஒரு முருகனின் அன்னை அவள் அபிராமி

ஓராயிரம் கண்கொண்டு காப்பாள் அபிராமி

ஔவியம் பேசா மொழி தருபவள் அபிராமி

 

PROF.V.V.MEENAKSHI JAYAKUMAR