மானே மானே

எடுப்பு

மானே மானே கோபம் ஏனோ?

தேனே தேனே உனையே தேடி வந்தேன் நானே – மானே மானே

தொடுப்பு

மாசில்லா மனம் கொண்ட உயிர்த் தோழி நீயே

தூசில்லா செயல் புரிபவளும் நீயே

காசில்லாதவரை கண்கொண்டு காணுமோ – உலகம்

ஏசில்லாதபடி எனைக் காக்கும் உன் கருணை ஏனோ?

முடிப்பு

மந்த நாசம் செய்யும் முறுவல் கொண்டாயோ

அந்த அன்னம் பழி சொல்லும் நடையும் கொண்டாயோ

பந்த பாசமெல்லாம் பல நூறு தந்தாயே

சொந்தமான பின்பும் தயக்கம் இனி ஏனோ?

– மானே

Prof. V.V. Meenakshi Jayakumar

அன்னபூரணி

Annapoorani

அன்னபூரணி யின் அழகே.. அழகு..

ஆதி சிவனுக்கு அன்னமிட்ட கையழகி

இவ்வுலக நாதனின் தேவியவள்

ஈகைக்கு எடுத்துக்காட்டவள்

உண்டி கொடுத்தோரை உயிர் கொடுப்போர் ஆக்குபவள்

ஊன்உடலுக்கு உறுதுணையானவள்

என்றும் என்றென்றும் நம் அன்னையவள்

ஏழு ஜென்ம பாவம் தீர்க்கும் தங்க அன்னபூரணி தரிசனம்

ஐங்கரன் துண்டி விநாயகர் தாயவள்

ஒரு விசாலாக்ஷியாகவும் வடிவெடுத்தவள்

ஓராறு முகனின் தாயுமானவள்

ஔவை தெய்வம் வடிவில் வந்த காஞ்சி மஹா பெரியவர் அருள் நம்மை என்றும் காக்கட்டும்.

Prof. V. V. Meenakshi Jayakumar