முருகன் பாட்டு

மருதமலை மேல் இருக்கும் முருகனைப் பாடு
மனசெல்லாம் நிறைந்திருக்கும் முருகனைப் பாடு
மருதமலை சென்று வந்தால் இனி இல்லை கேடு
முருகனின் பாதத்தை மனமே இனி நாடு
ஆறுபடை கோவில்கள் அவனது வீடு
அவற்றை மட்டும் தேடியே அணுகியே ஒரு
அள்ளித்தரும் தெய்வம் அவனுக்கு இல்லை ஈடு
முருகனின் சன்னிதியில் ஆனந்தம் தேடு
தலைஎழுத்தை மாற்றிவிடும் திருப்புகழ் ஏடு
ஒருநாள் கட்டாயம் செல்வோம் உடல் சுடும் காடு
அதற்குள் ஒரு நாளவது அலகு போடு
அன்பவர்கள் மத்தியில் அனைவரும் கூடு

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

பெருமாள்

பல்லவி
பள்ளி கொண்ட பெருமான் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
– பள்ளி கொண்ட

அனுபல்லவி
துள்ளி வரும் காவேரி கரையில்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
வள்ளி முருகனின் மாமன் அவர்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்

சரணம்
ஆழ்வார்கள் பாடிய அருள் அரங்கன்
பாழ்வான வாழ்வு மாற அருள் அரங்கன்
தாழ்வான நிலை மாறும் அவன் அருள் சுரந்தால்
வாழ்வான வாழ்வு வாழ பிரபந்தம் பாடுவோம்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

முருகன் பாட்டு

பல்லவி
மனமே மனமே அமைதி கொள்வாய்
மனத்துக்கினிய மருத்துவன் முருகன் உள்ளான்
-மனமே மனமே

அனுபல்லவி
தினமே தினமே அவன் புகழ் பாடு
தினகரனாய் வருவான் நம் பிழை பொறுப்பான்
– மனமே மனமே

சரணம்
முருகன் குமரன் குகன் என்று பாடு
வருவான் மயில் மேல் நம் குறை தீர்க்க
அருளும் தருவான் அன்பும் தருவான்
இருளும் களையும் ஒளியுடன் வாழ
– மனமே மனமே

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

முருகன் பாட்டு

பல்லவி
கந்தனே உனை நான் அழைக்கின்றேன்
சுந்தரனே நீ உடனே வா வா வா
– அழகு

அனுபல்லவி
சந்ததமும் நான் தொழுகின்றேன் – உனை
வந்தனை செய்தே நான் வாழ்கின்றேன்
– அழகு

சரணம்
ஆனைமுகன் சோதரனே அழகு தெய்வமே
ஊனை உருக்கும் தமிழ் இசை நாயகனே
ஏனைய தெய்வங்கள் இருந்தாலும் – சுட்ட
பானைபோல் வினையை நீக்கிடும் – அப்பா
– அழகு

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

அன்னை கங்கை நதி

அன்னை கங்கை நதி போற்றி
ஆனந்த சிவன் தலை அமர்ந்தாள் போற்றி
இளமை முருகனின் தாய் போற்றி
ஈரேழு உலகின் உயிர் போற்றி
உள்ளத்தில் நினைத்தாலே உடல் தூய்மை தருபவள் போற்றி
ஊரி ஒலிக்கும் வழிபாடு கொண்டாய் போற்றி
எப்போதும் வற்றாத நதி போற்றி
ஏழு தவம் செய்த பகீரதனுக்கு அருள் சுரந்தாய் போற்றி
ஐசுவரியம் அளிக்கும் அன்னை நீயே போற்றி
ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை கொண்டாய் போற்றி
ஒரு அய்யாவாள் கிணற்றில் வந்தருள் தந்தாய் போற்றி
ஓங்கார ஒலிகொண்ட மொழியாய் போற்றி
ஔவை தெய்வம் முருகனின் பக்தர்
முத்துஸ்வாமி தீஷிதருக்கு வீணை அளித்தாய் போற்றி

— பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்