அன்னை கங்கை நதி

அன்னை கங்கை நதி போற்றி
ஆனந்த சிவன் தலை அமர்ந்தாள் போற்றி
இளமை முருகனின் தாய் போற்றி
ஈரேழு உலகின் உயிர் போற்றி
உள்ளத்தில் நினைத்தாலே உடல் தூய்மை தருபவள் போற்றி
ஊரி ஒலிக்கும் வழிபாடு கொண்டாய் போற்றி
எப்போதும் வற்றாத நதி போற்றி
ஏழு தவம் செய்த பகீரதனுக்கு அருள் சுரந்தாய் போற்றி
ஐசுவரியம் அளிக்கும் அன்னை நீயே போற்றி
ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை கொண்டாய் போற்றி
ஒரு அய்யாவாள் கிணற்றில் வந்தருள் தந்தாய் போற்றி
ஓங்கார ஒலிகொண்ட மொழியாய் போற்றி
ஔவை தெய்வம் முருகனின் பக்தர்
முத்துஸ்வாமி தீஷிதருக்கு வீணை அளித்தாய் போற்றி

— பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

மங்களம்
அன்னை அபிராமிக்கு ஆயிரம் மங்களம்
அமிர்தகடேஸ்வர்க்கு அன்பான மங்களம்
கள்ள வாரண கணபதிக்கு கரும்பு கொண்டு மங்களம்
வள்ளி தேவானை நாயகன் முருகனுக்கு மங்களம்
எமதர்ம ராஜனுக்கு எப்போதும் மங்களம்
எங்குல சாமிக்கு இப்போது மங்களம்
மாயா முனிவரான மார்க்கடேயருக்கு மங்களம்
தேவார மூவருக்குத் தமிழிசையில் மங்களம்
காரிநாயனார் அவர் திருத்தமிழுக்கு மங்களம்
குங்கலிய நாயனார் திருப்பணிக்கு மங்களம்
அபிராமி பட்டருக்குப் பக்தியாலே மங்களம்
தூய அன்பு வடிவான அனைவருக்கும் மங்களம்

PROF. DR. V.V.MEENAKSHI JAYAKUMAR

அன்னை அபிராமி வாழி வாழி

குருஞானசம்பந்தர் – தருமைஆதினம்
அமுதகடேஸ்வரர் வாழி வாழி
அன்னை அபிராமி வாழி வாழி
கள்ள வாரண கணபதி வாழி
வள்ளிக் கணவன் முருகன் வாழி
எமதர்ம ராஜன் எப்போதும் காக்க
மாயா முனிவர் மார்க்கண்டேயர் வாழ்க
தேவார மூவரின் தெய்வத்தமிழ் வாழ்க
குங்கலியக் கலய நாயனார் வாழ்க
காரி நாயனார் வாழ்க
அபிராமி பட்டரின் அந்தாதி வாழ்க
தருமை ஆதினம் புகழும் ஓங்குக

PROF. DR. V.V.MEENAKSHI JAYAKUMAR

அபிராமி பட்டர், அபிராமி அந்தாதி

அபிராமி பட்டர், அபிராமி அந்தாதி

அன்னையே அபிராமி
ஆனைமுகனின் அன்னையே அபிராமி
இளமை முருகன் தாயே அபிராமி
ஈசனின் உயிரே அபிராமி
உலகீன்ற தாயே அபிராமி
ஊக்கம் தருவாயே அபிராமி
எங்கள் அன்னையே அபிராமி
ஏற்றம் தருவாயே அபிராமி
ஐயன் பட்டரின் தெய்வமே அபிராமி
ஒரு நிலவு தந்தாயே அபிராமி
ஓராயிரம் பெயர்க் கொண்டவளே அபிராமி
ஔடதம் நீ எமக்கு எங்களின் தாயே அபிராமி

Prof. DR. V.V.Meenakshi Jayakumar

அபிராமி அருள் 6

இருளை ஒளி ஆக்குபவள் அபிராமி – மன
இருளைப் போக்குபவள் அபிராமி
ஈசனில் பாதி அவள் அபிராமி
உலக உயிர்களின் உயிரவள் அபிராமி
அகிலாண்ட நாயகி அவள் அபிராமி
அவளை நாடிச் செல்வோம் நாம் வாரீர் வாரீர்

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

அபிராமி அருள் 5 கள்ளவாரணர் விநாயகர்

கள்ளவாரணர் விநாயகர்

விநாயகர் வணக்கமின்றிச் செயல் தொடங்கினர்
விளைவு என்னவெனில் குடம் மறைந்தது
அமுதக்குடம் மறைந்தது
அமுதக்குடம் மறைத்து விநாயகர் கள்ளரானார்
கள்ள வாரணர் என்ற பெயரும் கொண்டர்

தேவர்களும் முனிவர்களும் தான் வேண்டிட
தேவகணங்களின் அதிபதி அமுதம் தந்தார்
அமிர்தம் உண்டனரே அனைவரும் அமிர்தம் உண்டனரே

செல்வோம் வாரீர் திருக்கடயூர்ச் செல்வோம் வாரீர்
கள்ள வாரண கணபதியைக் காணவே நாம்
இன்று செல்வோம் வாரீர் திருக்கடையூர் செல்வோம் வாரீர்
அள்ள அள்ள குறையாத அன்பமுதம் உள்ளது
ஆயுள் தரும் காயம் காக்கும் ஆற்றல் அங்கு உள்ளது
செல்வோம் வாரீர் திருக்கடையூர் செல்வோம் வாரீர்

PROF. DR. V.V.MEENAKSHI JAYAKUMAR

அபிராமி அருள் 4

அபிராமி
உதயமானாள் அபிராமி உதயமானாள்
மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி நின்றாள்
நாயகி நான்முகி நாராயணி
கை நளின பஞ்ச நாயகி
சாம்பவி, சங்கரி, சாமளை
சாதி நச்சு வாய் அகி மாலினி
வாராகி சூலினி மாதங்கி

உதயமானாள் அபிராமி உதயமானள்
உத்தமனின் ஆபரணம் மூலமாக
உருமாறினார் லிங்க உருவானவர்
உருண்டை குடமாக உருமாறினார்
இளமைதரும் அமிர்தம் மீண்டும் வந்தது
ஈசன் செயலில் இதுவும் நல்லது

அன்புடை உமையாம் அபிராமியை
ஆண்டவன் ஆட்கொண்டார் தன் உருபெற்று
அம்மையும் அப்பனும் இணைந்து ஆடினார்
ஆனந்த திருநடம் அனைவரும் மகிழவே

PROF. DR. V.V. MEENAKSHI JAYAKUMAR

அபிராமி அருள் 3

அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமி தோன்றுதல்
தோன்றியது அமிர்தம் தேவர்கள் வியக்க – தாமரை
தோன்றிய நாயகன் மொழிந்தான் – “ நல்ல பசி
தோன்றிய புலியும் கொழுத்த மானும் ஒரே துறையில்
நீர் அருந்தும் இடம் எதுவோ அதுவே – பாற்கடல்
அமுதம் பகிர்ந்துண்ண ஏற்ற இடம்” என்று

புராண காலம் முதல் இருப்பது
காரணப்பெயரைத் தான் கொண்டது
பரமன் முதல் பலர் பூஜித்தது
வயது ஆயுளை அதிகரிப்பது
வில்வனம் என்ற பெயர்க் கொண்டது
பற்பல உயிர்களும் பகையின்றி வாழும் இடம்

வந்தனரே தேவர்கள் வந்தனரே – அமுதுண்டு
இறப்பின்றி இளமையுடன் என்றும் வாழ
வந்தனரே தேவர்கள் வந்தனரே
சென்றனரே வில்வவனம் சென்றனரே
திருமாலுடன் தேவர்களும் அமுதம் தனைப் பெறவேண்டி
சென்றனரே அங்குச் சென்றனரே

விதி வசத்தால் அமுதக் குடம் லிங்கமானது
விதி வசத்தால் அமுதக் குடம் லிங்கமானது
திருக்கடவூர் நாதர் அங்குத் தோன்றினார்
அமிர்த கடேஸ்வரர் அங்குத் தோன்றினார்

உலக உயிர்களைக் காத்திட வேண்டி
உத்தமன் திருமாலின் ஆபரணத்தில் இருந்து
உதயமானாள் அபிராமி உதயமானாள்

— PROF.DR. V. V. MEENAKSHI JAYAKUMAR

ABIRAMI ARUL

பாற்கடல் கடைதல்
இளமையும் இறவாத் தன்மையும் என்றும்
அளிக்கவல்லது பாற்கடல் அமிர்தம்
அதனைப் பெறவே தேவரும் அசுரரும்
கடலைக் கடைய உறுதி கொண்டனர்

மந்திர மலையை மத்தாக்கினர்
சுந்தர வாசுகியைக் கயிறாக்கினர்
தந்திரமாகவே கடைய கடைய
இந்திரகுழாம் இன்புற்று வாழவே
இறவாப் பலன்தரும் அமுதம் வந்தது

அபிராமி அருள்

அன்னை அபிராமி தாயே அருள்வாயே
அமுதகடேஸ்வரர் தந்தையே அருள்வாயே
கள்ள வாரண கணபதியே வருவாயே
வள்ளிக் கணவன் முருகனே வருவாயே
மாயா முனிவராம் மார்க்கண்டேய அருள் தரவேணுமே
எமதர்ம ராஜன் நீ எமக்கு ஆயுள் அருள்வாயே
அமுத தமிழிசை தந்த தேவார மூவர் அருள் வேண்டுமே
அபிராமி பட்டரே பக்தி இசை தரவேண்டுமே
காரி குங்கலிய நாயனாரின் பக்தி நமக்கு வேண்டுமே
குருஞானசம்பந்தரும் தருமை ஆதினமும் அருள் தரவேண்டும்

பேரா,முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்