அபிராமி அருள் 6

இருளை ஒளி ஆக்குபவள் அபிராமி – மன
இருளைப் போக்குபவள் அபிராமி
ஈசனில் பாதி அவள் அபிராமி
உலக உயிர்களின் உயிரவள் அபிராமி
அகிலாண்ட நாயகி அவள் அபிராமி
அவளை நாடிச் செல்வோம் நாம் வாரீர் வாரீர்

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ என் கண்ணே

ஆராரோ ஆரிரரோ

தெய்வங்கள் பெருமாள்பிள்ளை ஆராரோ ஆரிரரோ

செய்வாய் பல தவமே நீ ஆராரோ ஆரிரரோ

மெய்வாய் புலன் அடக்கி வளர் ஆராரோ ஆரிரரோ

சிவபூஜை தனை செய்வாய் ஆராரோ ஆரிரரோ

தவயோகம் தான் புரிவாய் ஆராரோ ஆரிரரோ

உலகன்னை பாதம் பிடி ஆராரோ ஆரிரரோ

மலம் மூன்றும் போக்கிடுவாள் ஆராரோ ஆரிரரோ

அன்னையும் அப்பனும் அவளே ஆராரோ ஆரிரரோ

துன்பத்தை நீக்குபவள் அவளே ஆராரோ ஆரிரரோ

என் கண்ணே கண் வளராய் ஆராரோ ஆரிரரோ

சன்மார்க்கத்தில் மூழ்கிடுவாய் ஆராரோ ஆரிரரோ

உமையவள் வடிவழகு உரைக்க ஒரு சொல்லுமில்லை

இமைக்காமல் பார்த்திடவே என்னால் முடியவில்லை

உதிக்கின்ற செங்கதிர் உமையவள் மேனி

துதிக்கின்ற என் சிறு சொற்கள் உமையவள் அருளே

மதிக்கின்ற சிவனுடைய உடலோ அவளில் பாதி

விதிக்கின்ற என்னுடைய வாழ்வு உமையவள் அருளே

சிவகாமி அருள்வாமி அபிராமி அருள்வாமி

Prof. V.V. Meenakshi Jayakumar

சரஸ்வதி

சரஸ்வதி

எடுப்பு

வீணை வாசிக்கும் கலைவாணி தாயே – காலம்

வீணாக்காமல் நான் கலை பெற அருள்வாய்

தொடுப்பு

ஆணை உன்மேலே தாயே கலை தர வருவாய்

துணையாக வேண்டும் உந்தன் அருள் நிதி கொடையே

முடிப்பு

அணை போல் காத்திடுவாய் – சரஸ்வதி தாயே

கணையாழி போல் வந்து கையில் பலம் தருவாய்

சுணை என அருள் சுரந்து காப்பாய் எனையே

வீணை என் வாழ்வின் ஒரு அங்கமாக மாற – வரம் ஒன்று தருவாய்

Prof. V. V. Meenakshi Jayakumar