Happy Pongal to all

பொங்குக!! பொங்கல்!!

 

 

நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!

விளைக வயலே! வருக இரவலர்!

பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!

பகைவர்புல் லார்க! பார்ப்பார் ஓதுக!

பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக!

வேந்துபகை தணிக! யாண்டுபல  நந்துக!

அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!

அரசுமுறை செய்க! களவில் லாகுக!

நன்று பெரிதுசிறக்க! தீதில்  லாகுக!

மாரி வாய்க்க! வளநனி சிறக்க!

– ஐங்குறுநூறு

 

பொங்கல் நல்வாழ்த்துகள்

 

Prof.V.V.Meenakshi Jayakumar

 

 

Mangalam Ramar, Guru, Sivan and Hanuman

பல்லவி

மங்களம் மங்களம் சங்கர குருவிற்கு மங்களம்

செய மங்களம் சுப மங்களம் ஜெய மங்களம் என்றும் சுப மங்களம்

அனுபல்லவி

தங்கும் இன்பம் பேரின்பமாக

எங்கும் இனிமேல் மங்களம்

பங்கில் உமையை கொண்ட பரமன்

எங்கள் குறைதீர்க்க குருவாய் வந்தார் – மங்களம்

சரணம்

வீங்கிய தாடை உடைய அனுமன்

பாங்கிய அழகில் நின்ற அனுமன்

ஓங்கிய புகழை கொண்ட அனுமன்

தூங்கும் ஆன்மாவை எழுப்பும் அனுமன் – மங்களம்

  • Prof.V.V.Meenakshi Jayakumar

Guru My Guru

பல்லவி

குருபக்தி செய்வாய் மனமே – தினமே

குருபக்தி செய்வாய் மனமே – குருபக்தி

அனுபல்லவி

குருபக்தி செய்ய செய்ய வினை அகற்றிடும்

குருபக்தி செய்ய செய்ய வினை கழிந்திடும் – குருபக்தி

சரணம்

உருவம் கொண்டு வந்த இறைவனே குரு அவர்

மருமாசு ஏதுமின்றி குருவைச் சரணடை

கருவினைத் தோன்றாமல்  காக்கும் கண்கண்ட தெய்வம்

இருவினைத் தீர்த்து இறைவன் தான் சேர்க்கும் எனவே

Prof. V.V.Meenakshi Jayakumar

Rama Namam – Rama Rama Rama

  1. பல்லவி

ராமா ராமா ராமா ராமா

ராம சந்திரா ராமா ராமா

அனுபல்லவி

ராமா என்று ஒருமுறை சொன்னால்

மாறா பாவ வினைகள் தீரும் – ராமா ராமா ராமா ராமா

சரணம்

சீதையின் ராமன் சிவசக்தி அன்பம்

கோதையின் ராமன் ஸ்ரீரங்க ராகன்

வாதைகள் தீர்ப்பான் கோசாலை ராமன்

பாதைகள் காட்டுவான் தசரத ராமன் – நல்

Prof.V.V.Meenakshi Jayakumar

Guru Bhakthi

பல்லவி

மனமே மனமே குருபக்தி செய்

மயக்கம் தீர்க்கும் குருசரண் அடை – மனமே

அனுபல்லவி

சினமே தவிர்த்து தவமே தான் புரி

இனமே புரியாத இன்பநிலை அடை – மனமே

சரணம்

மாநிலத்தில் இருந்து குருபக்தி இல்லாமல்

மாதவம் செய்தாலும் பயன் ஏதும் இல்லை.

காமியத்தில் அமிழ்ந்து இளைக்காமல் காத்திடுவார்

சாமியாகி வந்து நம்மை கரையே ஏற வைப்பார் எனவே

 

Prof. V.V.Meenakshi Jayakumar

potri potri potri

போற்றி போற்றி பாடல்

வானநாயகனே போற்றி போற்றி

ஞான நாயகனே போற்றி போற்றி

மோன நாயகனே போற்றி போற்றி

தீனன் எனைக் காப்பாய் போற்றி போற்றி

 

ஜகமெல்லாம் படைத்தாய் நீ போற்றி போற்றி

அகமெல்லாம் நிறைந்தாய் நீ போற்றி போற்றி

இகமெல்லாம் உணர்ந்தாய் நீ போற்றி போற்றி

மகமெல்லாம் ஆனாய் நீ போற்றி போற்றி

 

ஆடும் நாயகனே போற்றி

காடும் வீடானவா போற்றி போற்றி

தேடும் எனக்கருள்வாய் போற்றி போற்றி

கூடும் படி அருள்வாய் போற்றி போற்றி

 

குற்றம் களைவாய் நீ போற்றி போற்றி

முற்றும் துறக்க அருள்வாய் போற்றி போற்றி

கற்றும் பலன் இல்லை போற்றி போற்றி

சுற்றம் விடவில்லை போற்றி போற்றி

 

தீனன் எனைக் காப்பாய் போற்றி போற்றி

ஆனதனைச் செய்வாய் போற்றி போற்றி

ஞானபூர்ண நாதனே போற்றி போற்றி

தானமாய் உன் கருணைத் தரவே போற்றி போற்றி

 

உள்ளபடி வேண்டி நின்றேன் போற்றி போற்றி

கள்ளத்தனம் போக்கிடுவாய் போற்றி போற்றி

வெள்ளை உள்ளம் தந்திடுவாய் போற்றி போற்றி

கொள்ளை கொண்டாய் என் மனதை போற்றி போற்றி

 

நானென்ற அகந்தை அகற்று  போற்றி போற்றி

தானென்ற திமிரை அடக்கு போற்றி போற்றி

ஊனென்ற உயிரில் அடங்கு போற்றி போற்றி

தேனென்ற மொழி தருவாய் போற்றி போற்றி

 

pongaloo pongal

பொங்கல் பாட்டு

பொங்கலிட்டு நாம் மகிழ்வோம்

பொங்கலிட்டு நாம் மகிழ்வோம்

தை பொறந்தா சேதி வரும்

தை பொறந்தா சேதி வரும்

தன்னே………….

 

பொங்கல் வச்சி மகிழ்ந்திடுவோம்

பொங்கல் பொங்க பாடிடுவோம்

பாங்கு கொண்டு ஆடிடுவோம்

பாட்டுப் பாடி மகிழ்ந்திடுவோம்

தன்னே………….

 

பண்ணு கொண்டு பாடிடுவோம்

பண்ணு கொண்டு பாடிடுவோம்

பல ஆட்டம் ஆடிடுவோம்

ஒயிலாட்டம் ஆடிடுவோம்

தன்னே………….

 

வீட்டை வெள்ளை அடிச்சிடலாம்

வீட்டை வெள்ளை அடிச்சிடலாம்

பாட்டு பாடி மகிழ்ந்திடலாம்

பாட்டு பாடி மகிழ்ந்திடலாம்

தன்னே………….

போகியில தீயவற்றை

போகட்டும்னு எரித்திடுவோம்

நல்வகைகள் நம்மைத்தேடி

தன்னாலே வந்திடுமே

தன்னே………….

 

கரகம் எடுத்து நாம் மகிழ்வோம்

கரகம் எடுத்து நாம் மகிழ்வோம்

காளையத்தான் அடக்கிடுவோம்

காளையத்தான் அடக்கிடுவோம்

தன்னே………….

 

காணும் பொங்கல் காணவே

கடற்கரைக்கு சென்றிடுவோம்

கரும்பவெட்டி நாம் திண்போம்

விரும்பி நீயும் சாப்பிடவா

தன்னே………….

 

ஜாதி மத பேதங்கள்

ஊதி நாம வெறட்டிடுவோம்

ஜாதி மத பேதங்கள்

ஊதி நாம வெட்டிடுவோம்

தன்னே………….

 

மாடு கட்டி போர் அடிப்போம்

மாடு கட்டி போர் அடிப்போம்

காடு மல காத்திடுவோம்

காடு மல காத்திடுவோம்

தன்னே………….

 

காலை வரும் சூரியனை

கையெடுத்து கும்பிடுவோம்

மாலை வரும் சந்திரன

மனசார ரசிச்சிடுவோம்

தன்னே………….

 

திருக்குறளை பாடிடுவோம்

திருமுறைகள் ஓதிடுவோம்

வள்ளுவரை வணங்கிடுவோம்

வாழ்க்கையிலே உயர்ந்திடுவோம்

தன்னே………….

 

தேவாரங்கள் பாடிடுவோம்

மூவாரங்கள் பாடிடுவோம்

பட்டி மாட்ட காத்திடுவோம்

பட்டி மாட்ட காத்திடுவோம்

தன்னே………….

 

தமிழ்பாட்டு பாடிடலாம்

தமிழ்பாட்டு பாடிடலாம்

தரமாக வாழ்ந்திடலாம்

தமிழ்பாட்டு பாடிடலாம்

தன்னே………….

Prof. V.V.Meenakshi Jayakumar

Go to temple – Visit a temple – Daily Routine.

பல்லவி

கோயில் வாசல் வருவேனோ? – உன் திருக்

கோயில் வாசல் வருவேனோ?

அனுபல்லவி

தாயின் சொல் கேளாய் பிள்ளையாய் வளர்ந்தேன்

நோய் நொடி தாக்கி மூப்பு வரும் முன்னே – கோயில் வாசல்

வருவேனோ?

சரணம்

வாயில் வந்து நின்றால் போதும் நாயேன் வாழ்வு கடைத்தேறும்

போயும் போயும் இந்த இழி பிறவி வேண்டவே வேண்டாம். – இனி

சாயும் இவ்வுடல் கொண்டு சதானந்தன் அடி பணிந்து

தீயில் வேகும் வரை நின் நினைப்பொன்றே போதும் போதும்

 

Prof.V.V.Meenakshi Jayakumar

Mahatma Gandhi – great Soul

பல்லவி

 

காந்தியைப் போல் ஒரு

சாந்தசொரூபனை காண்பதும் எளிதாமோ?

  • மகாத்மா

அனுபல்லவி

மாந்தரிலே ஞானயோகம் மேலும் தவ

வேந்தரிலே சுயநலம் சிறிதுமில்லா

  • காந்தியைப்

 

சரணம்

அகிம்சைத்தனிலே புத்தரவர்

ஆத்ம சோதனையில் ஏசுநாதரவர்

அறுபகையும் வென்ற கர்ம வீரர் அவர் நமக்கு

பாக்கியத்தால் கிட்டிய நாட்டில் அவதரித்த

  • காந்தியைப்

 

சரணம் 2

குழந்தை உள்ளமும் அன்பு கனிந்த மொழியும் கொண்டு

கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்

இயல்பாய் புரியும் மோகன புன்னகையும்

தவழ பகைவரும் கண்டஞ்சும் சுதன் இனிமேல்

  • காந்தியைப் போல ஒரு

 

Jai Hind.. Jai Hind ..Jai Hind

மெட்டு: பாரத சமுதாயம் வாழ்கவே!

பாரத சமுதாயம் வாழ்கவே

சுதந்திரம் தனைப் பெற்றோம்

சுதந்திரம் தனைப் பெற்றோம் – பெற்ற

சுதந்திரத்தினை பேணி நாம் காப்போம் – பாடு பட்டு பெற்ற

சுதந்திரத்தினை பேணி நாம் காப்போம்

மத ஜாதி வேற்றுமையை களைந்து நாம் வாழ்வோம்

மத ஜாதி வேற்றுமையை களைந்து நாம் வாழ்வோம்

எழுபத்தி ஐந்து ஆண்டுகளில் பல வித உயர்வடைந்தோம்

எழுபத்தி ஐந்து ஆண்டுகளில் பல வித உயர்வடைந்தோம்

எழுச்சியுடன் உழைத்து நாம் வல்லரசாக மாறுவோம்

எழுச்சியுடன் உழைத்து நாம் வல்லரசாக மாறுவோம்

வல்லரசாக மாறுவோம்..

நாம் வல்லரசாக மாறுவோம்.

பாரத சமுதாயம் வாழ்கவ! வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே!  ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே!.

 

Prof.V.V.Meenakshi Jayakumar