அன்னை அபிராமி வாழி வாழி

குருஞானசம்பந்தர் – தருமைஆதினம்
அமுதகடேஸ்வரர் வாழி வாழி
அன்னை அபிராமி வாழி வாழி
கள்ள வாரண கணபதி வாழி
வள்ளிக் கணவன் முருகன் வாழி
எமதர்ம ராஜன் எப்போதும் காக்க
மாயா முனிவர் மார்க்கண்டேயர் வாழ்க
தேவார மூவரின் தெய்வத்தமிழ் வாழ்க
குங்கலியக் கலய நாயனார் வாழ்க
காரி நாயனார் வாழ்க
அபிராமி பட்டரின் அந்தாதி வாழ்க
தருமை ஆதினம் புகழும் ஓங்குக

PROF. DR. V.V.MEENAKSHI JAYAKUMAR

அபிராமி அருள் 6

இருளை ஒளி ஆக்குபவள் அபிராமி – மன
இருளைப் போக்குபவள் அபிராமி
ஈசனில் பாதி அவள் அபிராமி
உலக உயிர்களின் உயிரவள் அபிராமி
அகிலாண்ட நாயகி அவள் அபிராமி
அவளை நாடிச் செல்வோம் நாம் வாரீர் வாரீர்

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

அபிராமி அருள் 4

அபிராமி
உதயமானாள் அபிராமி உதயமானாள்
மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி நின்றாள்
நாயகி நான்முகி நாராயணி
கை நளின பஞ்ச நாயகி
சாம்பவி, சங்கரி, சாமளை
சாதி நச்சு வாய் அகி மாலினி
வாராகி சூலினி மாதங்கி

உதயமானாள் அபிராமி உதயமானள்
உத்தமனின் ஆபரணம் மூலமாக
உருமாறினார் லிங்க உருவானவர்
உருண்டை குடமாக உருமாறினார்
இளமைதரும் அமிர்தம் மீண்டும் வந்தது
ஈசன் செயலில் இதுவும் நல்லது

அன்புடை உமையாம் அபிராமியை
ஆண்டவன் ஆட்கொண்டார் தன் உருபெற்று
அம்மையும் அப்பனும் இணைந்து ஆடினார்
ஆனந்த திருநடம் அனைவரும் மகிழவே

PROF. DR. V.V. MEENAKSHI JAYAKUMAR

அபிராமி அருள் 3

அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமி தோன்றுதல்
தோன்றியது அமிர்தம் தேவர்கள் வியக்க – தாமரை
தோன்றிய நாயகன் மொழிந்தான் – “ நல்ல பசி
தோன்றிய புலியும் கொழுத்த மானும் ஒரே துறையில்
நீர் அருந்தும் இடம் எதுவோ அதுவே – பாற்கடல்
அமுதம் பகிர்ந்துண்ண ஏற்ற இடம்” என்று

புராண காலம் முதல் இருப்பது
காரணப்பெயரைத் தான் கொண்டது
பரமன் முதல் பலர் பூஜித்தது
வயது ஆயுளை அதிகரிப்பது
வில்வனம் என்ற பெயர்க் கொண்டது
பற்பல உயிர்களும் பகையின்றி வாழும் இடம்

வந்தனரே தேவர்கள் வந்தனரே – அமுதுண்டு
இறப்பின்றி இளமையுடன் என்றும் வாழ
வந்தனரே தேவர்கள் வந்தனரே
சென்றனரே வில்வவனம் சென்றனரே
திருமாலுடன் தேவர்களும் அமுதம் தனைப் பெறவேண்டி
சென்றனரே அங்குச் சென்றனரே

விதி வசத்தால் அமுதக் குடம் லிங்கமானது
விதி வசத்தால் அமுதக் குடம் லிங்கமானது
திருக்கடவூர் நாதர் அங்குத் தோன்றினார்
அமிர்த கடேஸ்வரர் அங்குத் தோன்றினார்

உலக உயிர்களைக் காத்திட வேண்டி
உத்தமன் திருமாலின் ஆபரணத்தில் இருந்து
உதயமானாள் அபிராமி உதயமானாள்

— PROF.DR. V. V. MEENAKSHI JAYAKUMAR

ABIRAMI ARUL

பாற்கடல் கடைதல்
இளமையும் இறவாத் தன்மையும் என்றும்
அளிக்கவல்லது பாற்கடல் அமிர்தம்
அதனைப் பெறவே தேவரும் அசுரரும்
கடலைக் கடைய உறுதி கொண்டனர்

மந்திர மலையை மத்தாக்கினர்
சுந்தர வாசுகியைக் கயிறாக்கினர்
தந்திரமாகவே கடைய கடைய
இந்திரகுழாம் இன்புற்று வாழவே
இறவாப் பலன்தரும் அமுதம் வந்தது

அபிராமி அருள்

அன்னை அபிராமி தாயே அருள்வாயே
அமுதகடேஸ்வரர் தந்தையே அருள்வாயே
கள்ள வாரண கணபதியே வருவாயே
வள்ளிக் கணவன் முருகனே வருவாயே
மாயா முனிவராம் மார்க்கண்டேய அருள் தரவேணுமே
எமதர்ம ராஜன் நீ எமக்கு ஆயுள் அருள்வாயே
அமுத தமிழிசை தந்த தேவார மூவர் அருள் வேண்டுமே
அபிராமி பட்டரே பக்தி இசை தரவேண்டுமே
காரி குங்கலிய நாயனாரின் பக்தி நமக்கு வேண்டுமே
குருஞானசம்பந்தரும் தருமை ஆதினமும் அருள் தரவேண்டும்

பேரா,முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

அபிராமி

Abhirami … THE GODDESS FROM JEWELLERY OF SRI VISHNU.

She can’t tolerate the struggle of Her true devotees She threw Her ear ring to bring moon on the night of Amavasai (moonless ) day.

When we pray HER, SHE GIVES THE FOLLOWING AS GIFTS OF BLESSINGS

Aishwaryam, good education, long life, good friendship, glorified life, ever youthfulness, heart Without disappointment and dullness, beautiful body , which will be Godly look, all our relationship will be with pure heart, will give everything we need, not we want, name and fame also given by GODDESS ABIRAMI.

PROF. DR. V V MEENAKSHI JAYAKUMAR

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ என் கண்ணே

ஆராரோ ஆரிரரோ

தெய்வங்கள் பெருமாள்பிள்ளை ஆராரோ ஆரிரரோ

செய்வாய் பல தவமே நீ ஆராரோ ஆரிரரோ

மெய்வாய் புலன் அடக்கி வளர் ஆராரோ ஆரிரரோ

சிவபூஜை தனை செய்வாய் ஆராரோ ஆரிரரோ

தவயோகம் தான் புரிவாய் ஆராரோ ஆரிரரோ

உலகன்னை பாதம் பிடி ஆராரோ ஆரிரரோ

மலம் மூன்றும் போக்கிடுவாள் ஆராரோ ஆரிரரோ

அன்னையும் அப்பனும் அவளே ஆராரோ ஆரிரரோ

துன்பத்தை நீக்குபவள் அவளே ஆராரோ ஆரிரரோ

என் கண்ணே கண் வளராய் ஆராரோ ஆரிரரோ

சன்மார்க்கத்தில் மூழ்கிடுவாய் ஆராரோ ஆரிரரோ

உமையவள் வடிவழகு உரைக்க ஒரு சொல்லுமில்லை

இமைக்காமல் பார்த்திடவே என்னால் முடியவில்லை

உதிக்கின்ற செங்கதிர் உமையவள் மேனி

துதிக்கின்ற என் சிறு சொற்கள் உமையவள் அருளே

மதிக்கின்ற சிவனுடைய உடலோ அவளில் பாதி

விதிக்கின்ற என்னுடைய வாழ்வு உமையவள் அருளே

சிவகாமி அருள்வாமி அபிராமி அருள்வாமி

Prof. V.V. Meenakshi Jayakumar