அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

எடுப்பு

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் எதற்கும் அஞ்ச மாட்டேன்

தொடுப்பு

கொஞ்சி பேசும் வள்ளி மணாளன் முருகனிடம்

தஞ்சமென்று சேர்ந்து விட்டேன் நான் – எனவே

முடிப்பு

பஞ்சு போல் பறந்திடும் பாவங்கள் எல்லாம்

எஞ்சி இருப்பது பண்ணிய புண்ணியங்கள் தானே

காஞ்சி வாழ் மஹா பெரியவா அருள் உண்டு என்றும்

வாஞ்சையுடனே அவர் உடன் காப்பார் எனவே

 – அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

Prof. V. V. Meenakshi Jayakumar

கண்ணன் பிறந்த நாள் விழா

கண்ணன் பிறந்த நாள் விழா

kannan

அஷ்டமி நாள் பார்த்து அவதரித்தான் கண்ணன்…..

ஆதி நாராயணனே இங்கு வந்தான்.

இசைக்குழல் கொண்டு வந்தான்.

ஈடில்லா நாதம் தந்தான்..

உலகினில் உத்தம காதலனாக நின்றான்

ஊர்கோடி யமுனையில் கோபியர் தாபம் தீர்த்தான்

எண்குணம் படைத்தவன் துவாரகையில் அமர்ந்தான்

ஏழுலகை வென்று .. அவன் வேப்பமரமாகியுள்ளான்…..

ஐயமற கீதை சொன்னான்..அதர்மத்தை அழிக்க..

ஒன்றே பரம் என்றே நின்றான்  விட்டலன் ஆனான்

ஓசைஒலி எல்லாம் அவனே…கண்ணன் என்பவன்..

ஔவை தெய்வமாம் முருகன் மாமனவன்

காஞ்சி மஹா பெரியவர் கருத்தில் நின்றவன்

காஞ்சி மஹா பெரியவர் கருத்தில் நின்றவன்

அவரின்  தெய்வத்தின் குரலாய் என்றும் எழுத்தில் நிற்பவன்.. கண்ணன்…

Prof. V. V. Meenakshi Jayakumar

அருவி

அருவி

அருவி

அருவியாகிறேன் நான் அருவியாகிறேன்

ஆம் அம்மா நீர் உணர்ந்தது உண்மை தான்

இடர்களை களைவேன் நான்

ஈங்கு எனக்கென்று ஒரு பாதை வகுப்பேன்

உயர்ந்த இடத்தில் பிறந்து வந்தேன் – நான்

ஊர் போற்ற பரந்து விரிகிறேன்

எண்ணில்லா தடைகளை நான்

ஏற்றமுடன் கடந்து வருகிறேன்

ஐம்புலன்களையும் அடக்கி வருகிறேன் – நான்

ஒலி பல எழுப்பி வருகிறேன்

ஓடி ஓடி ஆடி வருகிறேன்

ஔடதம் பல என்னில் கொண்டு வருகிறேன்

அகிலம் பார்த்து விரிந்து வருகிறேன்

காஞ்சி மகா பெரியவரின் ஆசி பெற்று வருகிறேன்.

 

Prof. V. V. Meenakshi Jayakumar