முருகன் பாட்டு

மருதமலை மேல் இருக்கும் முருகனைப் பாடு
மனசெல்லாம் நிறைந்திருக்கும் முருகனைப் பாடு
மருதமலை சென்று வந்தால் இனி இல்லை கேடு
முருகனின் பாதத்தை மனமே இனி நாடு
ஆறுபடை கோவில்கள் அவனது வீடு
அவற்றை மட்டும் தேடியே அணுகியே ஒரு
அள்ளித்தரும் தெய்வம் அவனுக்கு இல்லை ஈடு
முருகனின் சன்னிதியில் ஆனந்தம் தேடு
தலைஎழுத்தை மாற்றிவிடும் திருப்புகழ் ஏடு
ஒருநாள் கட்டாயம் செல்வோம் உடல் சுடும் காடு
அதற்குள் ஒரு நாளவது அலகு போடு
அன்பவர்கள் மத்தியில் அனைவரும் கூடு

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

முருகன் பாட்டு

பல்லவி
கந்தனே உனை நான் அழைக்கின்றேன்
சுந்தரனே நீ உடனே வா வா வா
– அழகு

அனுபல்லவி
சந்ததமும் நான் தொழுகின்றேன் – உனை
வந்தனை செய்தே நான் வாழ்கின்றேன்
– அழகு

சரணம்
ஆனைமுகன் சோதரனே அழகு தெய்வமே
ஊனை உருக்கும் தமிழ் இசை நாயகனே
ஏனைய தெய்வங்கள் இருந்தாலும் – சுட்ட
பானைபோல் வினையை நீக்கிடும் – அப்பா
– அழகு

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்