kummi paattu

 

கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)

 

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி)

 

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)

  • Bharathiyar

Kaavadi Sindhu song

அழகு தெய்வமாக வந்து—

காவடிச் சிந்து—செஞ்சுருட்டி

 

How Murugan, Idumban and Kavadi came to Palani

அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்

ஆதி சக்தி அன்னை தந்த பாலன் — அவன் 

அசுரர் தம்மை வென்ற வடிவேலன்நல்ல 

அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும்

அன்பர் வாழவே கருணை செய் குஹன்

அரனார் குருவாம் உயர் ஸீலன்என்றும்                                                                                   அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்

குழந்தையாகக் குமரனாகக்

கோவணாடைத் து­றவியாகக்                                                      கோலம் கொள்ளும் காக்ஷி என்ன சொல்வேன்?– கண்டு                                                                கூறும் மாய வினைகள் யாவும் வெல்வேன்– இந்தக்                                                                  குவலயத்திலோர் கலியுகப் பெருவரதனாய்த்

திகழ்ந்தருளும்  கந்தனைக்                           கும்பிட்டென்றன் பிணிகள் நீங்கி மகிழ்வேன்- உள்ளக்                                                                குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்

 

நீல மயில் மீதில் ஏறி ஆவினன்குடியில் தோன்றும்

நிமலனாம் குழந்தை முருகேசன் — அவன்                                                                                                           நித்திலப் புன்முறுவல் வள்ளி நேசன் – இந்த

நீள் நிலந்தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் தூரன்
நெஞ்சை நீங்காதென்றும் அங்கு வாசன்

This song is taken from the book “Murugan Arulmani Malai  – Periasamy Thooran

 

 

மாணிக்கவாசகர்

வணக்கம்.

மாணிக்கவாசகர் – திருவாசகம் என்னும் தேன் தந்தவர்.

திருக்கோவை என்னும் நன்னூல் தந்தவர்.

இறைவன்:

 

 

பாலைக் கொடுத்து ஆட்கொண்டது திருஞான சம்பந்தரை

சூலைக் கொடுத்து ஆட்கொண்டது திரு நாவுக்கரசரை

ஓலைக் கொடுத்து ஆட்கொண்டது சுந்தரரை

காலைக் கொடுத்து ஆட்கொண்டது மாணிக்கவாசகரை.

 

நாலு பேர் போன வழியில் போ என்று நம் பெரியோர் குறிப்பிட்ட நாலு பேர் இவர்கள் தான்.

மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் 51 பதிகங்கள் கொண்டது.

 

மாணிக்கவாசகர் Archives | Tamil Minutes

பண் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகிறது.

ஆனால், இசைக் கருவிகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகிறது.

மாணிக்கவாசகரின் பாடல்கள் பாடப்பெறம் இராகங்கள்:

திருவாசகம் – மோகனம்

திருப்பள்ளியெழுச்சி – பூபாளம்

திருப்பொன்னூஞ்சல் – ஆனந்த பைரவி

திருச்சாழல் – ஆனந்த பைரவி, ஆரபி

சிவபுராணம் & பிற அகவல் – சங்கராபரணம்.

மாணிக்கவாசகர் முக்தி

 

இறைவனால் ஈர்க்கப்பட்ட ...

தான் இயற்றிய திருவாசகத்தின் பொருள் தில்லைக் கூத்தனே என்று கூறி தில்லை நடராஜ பெருமானுடன் கலந்தார்.

 

 

Thiruvilaiyadal Puranam

Namaste all.

At the wedding of the Lord indulged in many divine dramas – Thiruvilaiyadalgal.

The two sages Pathanjali and Viyagrapathar would normally partake food only after seeing the Divine Dance at Chidambaram. To bless them, the Lord Sundareswara executed the divide dance in Madurai.

The author of Thiruvilaiyadal puranam Paranjothi Munivar narrates this Thiruvilaiyadal  in a beautiful way and blessings for whose see this posture of God will attain mukthi, is the vara prasadham.

Please chant the following

பராபர முதலே போற்றி

பக்தியில் விளைவாய் போற்றி

சராசரமாகி வேறாய்  நின்ற தற்பரனே போற்றி

கராசல உரியாய் போற்றி

கனக அம்பலத்துள் ஆடும்

நிராமய பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி……

 

ஒன்றாகி, ஐந்தாய், ஐயைந்து உருவாக வருவாய் போற்றி

இன்றாகிச் சென்ற  நாளாய், எதிர் நாளாய் எழுவாய் போற்றி

—- பேரா. வே.வெ.மீனாட்சி

இசை – இசைக் கட்டுரைகள்

வணக்கம்.

இசைக் கட்டுரை – 1 – இசையின் பெருமை

1. இசை என்ற சொல்லுக்கு  பல பொருள் இருந்தாலும், பாட்டு, இசைதல், புகழ் என்ற பொருளே பெரும்பாலும் எடுத்தாளப்படுகிறது.

2. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை.

3. இறைவன் நாத மயமான காரணத்தினால் நாதன் என்று போற்றப்படுகிறான்.

4. இறைவன் இசைக் கருவிகளுடன் காட்சி தருகிறான்.

5. இசையால் இறைவனை மட்டுமின்றி, உயிர்கள் அனைத்தயும் வசமாக்க இயலும்.

6. ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் இசை அவனுடன் பயணிக்கிறது.

7. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் இசையுடன் வாழ்கிறான்.

Lullabies... come back ...? || தாலாட்டு ...

8. தாலாட்டு கேட்டு வளரும் குழந்தை, பள்ளியில் இசையுடனே பாடங்களை பயில்கிறது.

9. வேலை வாய்ப்பின் போதும் இசை அம்மனிதனுடன் இருக்கிறது.

10. நல்ல வேலை கிடைத்தபின் கல்யாணம். மனம் நிறைந்த மனைவி கிடைக்கும் போது, இசை, காலை,  மாலை  என மனம் மகிழ்ந்த தருணமெல்லாம் மங்கள் இசை.

11. மனைவி வந்த பிறகு மற்றென்ன? ஆம். மிகச் சரி. குழந்தை. மீண்டும் தாலாட்டு.

12. தந்தையானவன் காலப்போக்கில் தாத்தாவாகிறான். அவனின் வயதுக்கால இசையை கேட்க விரும்புகிறான்.

13. தள்ளாடி தள்ளாடி ஒரு நாள் மீண்டும் மாண்டு விடுகிறான்.  அப்போது அவனுக்கு சொந்த பந்தங்கள் இசை வழி கொண்டு செல்கின்றனர்.

14. இவ்வாறு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசை மனிதனின் மனசாட்சி போல் அவனுடன் வாழ்கிறது.

15. இசையின் மூலம் விலங்குகளை வசமாக்கலாம்.

16. இசை கேட்டு பயிர்கள் நன்கு வளர்வதாக ஆராய்சிகள் கூறுகின்றன.

17. இசை மூலம் நோய்களை குணமாக்கலாம்.

புதிய பாடல் – இசை

வணக்கம்.

சிவனை அடைய சிந்திக்கும் வேளை இது

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் ...

பல்லவி

சிவ தரிசனம் வேண்டும் – எனக்கு

சிவ தரிசனம் வேண்டும்

அனுபல்லவி

பவ சாகரம் கடக்க –

அவ சாகரம் கடக்க – சிவ தரிசனம் வேண்டும் – எனக்கு

சரணம்

விவகாரமாய் மனது செல்லாமல் இருத்திட

தவயோகம் புரிந்து – தன்னலம் தான் திருத்திட

உவகை மிகக் கொண்டு – உன்னதமாய் வாழ

சவயோகம் புரிந்து சிவன் சன்னதி அடைந்திட

– சிவ தரிசனம் வேண்டும் – எனக்கு

சிவ தரிசனம் வேண்டும்

– மீனாட்சி ஜெயகுமார்

புதிய பாடல் – இசை

வணக்கம்

 

ஸ்ரீ மஹா பெரியவா ஜகத்குரு அஷ்டகம் Sri ...

…..குரு பக்தி செய்வாய் மனமே…

பல்லவி

மனமே மனமே மனமே மனமே குருபக்தி செய்திடுவாய் நீயே

மயக்கம் தீர்க்கும் குருவின் சரணை அன்புடன் இனி  அடைவாய் நீயே

 

அனு பல்லவி

சினமே தவிர்த்து தவமே தான் புரிவாய் –

குருவின் அருள் உண்டு கலங்காதே

இனமே புரியா இன்ப நிலை அடைவாய்

குருவின் அருள் உண்டு மயங்காதே

— மனமே மனமே மனமே மனமே குருபக்தி

சரணம்

மானிடனாய் பிறந்து குருபக்தி இல்லாமல்

மாதவம் செய்தாலும் பயன் இல்லை

காமியதில் அமிழ்ந்து இளைக்காமல் காக்கும் – குரு

சாமி அருள் காக்கும் எம பயமில்லை ..

மனமே மனமே மனமே மனமே குருபக்தி செய்.

– மீனாட்சி ஜெயகுமார்.

 

புதிய பாடல்- இசை

வணக்கம்

ஸ்ரீ ராம நவமி: ராமர் ஜாதகம் ...

பல்லவி

ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

அனுபல்லவி

ராமா என்று ஒருமுறை சொன்னால்

மாறா பாவ வினை தீருமே

ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

சரணம்

சீதையின் ராமன் சிவ சக்தி அன்பன்

கோதையின் ராமன் ஸ்ரீ ரங்கராஜன்

வாதைகள் தீர்ப்பவன் கோசலை ராமன் – நல்

பாதைகள் காட்டுவான் தசரத ராமன்.

ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

 

— மீனாட்சி ஜெயகுமார்.

 

 

Music – question and answers

Namaste.

Answer the following:

  1. What is the symbol for Jampa tala.
  2. Which instrument is called as the Drone
  3. Ravi Kiran is a famous —- artist.
  4. The tala with ten aksharakala is
  5. The composer of pillaiyar geetham. (Paidala Gurumoorthy sastrigal / Tyagarajar)
  6. — Raga is the “major scale” in western music
  7. The nishada in Mayamalavagoulai raga is ……
  8. Nagaswaram has —— holes
  9. —- is the mangala vadyam ( Tavil / saxophone)
  10. The composer of Varnam ” Anname”

திருமந்திரம்…‌1

திருமந்திரம்

அறிவுத் தமிழில் பல உண்டு.

ஆண்டவனை அறிய வழி உண்டு

இசையுடன் வாழ்ந்து

ஈசனை அடையலாம்

உண்மை யோகக் கலையை

ஊக்கத்துடன் பயின்று வர

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

ஏழிசைப் பாடி தன்னைத் தான்

ஐயமின்றி உணர்ந்துய்ய

ஒரு மூவாயிரம் மந்திரங்கள்

ஓதி உணர்ந்து பயிற்சி செய்தால்

ஔடதம் தவிர்த்து ஆண்டுகள் நூறு அழகாக வாழலாம்..

திருமந்திரம் தனை உணர்ந்து ஓதி நாம் அனைவரும் உயர்வடைய

காஞ்சி மஹா‌பெரியவா

பாத துளி அருளட்டும்

…… To be continued..

Dr. V. V. Meenakshi Jayakumar.