Thiruvaasagam

திருச்சாழல்

(தில்லையில் அருளியது)

சிவனுடைய காருணியம்

(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

255.

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை

ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.

Thiruvaasagam

குழைத்த பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது)

ஆத்தும நிவேதனம்

(அறுசீர் விருத்தம்)

501.

வேண்டத் தக்க  தறிவோய்நீ

வேண்ட முழுதுந் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள்செய்தாய்

யானுமதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே.

 

சிவபுராணம்

திருவாசகம்

சிவபுராணம்

(திருப்பெருந்துறையில் அருளியது)

சிவனது அநாதி முறைமையான பழைமை

(கலி வெண்பா)

201706301423136161_manikkavasagar-history_SECVPF

 

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க                       5

வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க

பிறப்பறுக்கும்  பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க   10

ஈசனடி போற்றி யெந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவ னடி போற்றி                 15

ஆராத இன்பம் அருளுமலை போற்றி