ABIRAMI ARUL

பாற்கடல் கடைதல்
இளமையும் இறவாத் தன்மையும் என்றும்
அளிக்கவல்லது பாற்கடல் அமிர்தம்
அதனைப் பெறவே தேவரும் அசுரரும்
கடலைக் கடைய உறுதி கொண்டனர்

மந்திர மலையை மத்தாக்கினர்
சுந்தர வாசுகியைக் கயிறாக்கினர்
தந்திரமாகவே கடைய கடைய
இந்திரகுழாம் இன்புற்று வாழவே
இறவாப் பலன்தரும் அமுதம் வந்தது

Devi Saraswati stotra

Devi Saraswati..

O great Saraswati….

O beautiful lotus eyed Goddess of Knowledge…

O knowledge incarnate,

I bow unto You. Grant me Knowledge supreme.

….. Saraswati stotra.

எடுப்பு

சரஸ்வதியே உன்னை வணங்குகிறேன்

வரம் பல தருவாய் தாயே…கலை தரும்

தொடுப்பு

சனகாதியர் தொழும் நான்முகன் நாயகி..

தினம் தரும் கல்வியை எங்களுக்கருள்வாய்…

முடிப்பு

நாரதன் தாயே நலம் அருள்வாயே..

பாரதம் பாடிட துணையாய் நின்றாயே

வாரத்தில் அனுதினம் உன்னடி பணிந்தோம்

சாரமே இவ்வாழ்வின் கதி நீ தானே….

சாரமே இவ்வாழ்வின் கதி நீ தானே

சரஸ்வதியே உன்னை வணங்குகிறேன்…

— பேரா. மீனாட்சி ஜெயக்குமார்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

ANNAI ABHIRAMAI

அபிராமி

அபிராமி பட்டருக்கு அருளிய அபிராமி

ஆற்றல் பல தருபவள் அபிராமி

இனிய வீணை இசைப்பவள் அபிராமி

ஈசனில் பாதியவள் அபிராமி

உலகளந்த நாயகி தான் அபிராமி

ஊக்கம் தரும் தெய்வமள்  அபிராமி

எங்கிருக்கும் சத்தியவள்  அபிராமி

ஏழிசையைத் தருபவள்  தான் அபிராமி

ஐங்கரனின் தாயானவள் அபிராமி

ஒரு முருகனின் அன்னை அவள் அபிராமி

ஓராயிரம் கண்கொண்டு காப்பாள் அபிராமி

ஔவியம் பேசா மொழி தருபவள் அபிராமி

 

PROF.V.V.MEENAKSHI JAYAKUMAR