இசை ஆரம்

அன்றும் இன்றும் என்றுமுள்ளது இசை
ஆரவாரமில்லாமல் அமைதியாய் ஒரு மின்னிதழ்
இசை ஆரம் என்ற பெயர் கொண்ட இம் மின்னிதழ்
ஈசன் அருளாலும் ஆன்றோர் ஆசியாலும்
உலகெலாம் சென்று இசை ஆய்வு செய்வோரை
ஊக்குவித்து புதிய புதிய ஆராய்ச்சிகள் மலரவும்
எண்ணத்திலும் எழுத்திலும் இசை நடன சார் எழுச்சியும் எழ
ஏற்றமான பங்களிப்பு அளித்திடும் இசை ஆரம் என்பதில்
ஐயமில்லை ஐயமில்லை ஐயமேயில்லை
ஒருமருந்தாம் இவ்வுள்ளத்திற்கும் உணர்விக்குமானது இசை
ஓங்கார பரமன் வடிவான இசையை பயில்வோம்
ஔவைத்தமிழின் இசையை இசை ஆரத்தில் வாசித்து பயன் பெறுவோம்.

பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

இசை – இசைக் கட்டுரைகள்

வணக்கம்.

இசைக் கட்டுரை – 1 – இசையின் பெருமை

1. இசை என்ற சொல்லுக்கு  பல பொருள் இருந்தாலும், பாட்டு, இசைதல், புகழ் என்ற பொருளே பெரும்பாலும் எடுத்தாளப்படுகிறது.

2. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை.

3. இறைவன் நாத மயமான காரணத்தினால் நாதன் என்று போற்றப்படுகிறான்.

4. இறைவன் இசைக் கருவிகளுடன் காட்சி தருகிறான்.

5. இசையால் இறைவனை மட்டுமின்றி, உயிர்கள் அனைத்தயும் வசமாக்க இயலும்.

6. ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் இசை அவனுடன் பயணிக்கிறது.

7. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் இசையுடன் வாழ்கிறான்.

Lullabies... come back ...? || தாலாட்டு ...

8. தாலாட்டு கேட்டு வளரும் குழந்தை, பள்ளியில் இசையுடனே பாடங்களை பயில்கிறது.

9. வேலை வாய்ப்பின் போதும் இசை அம்மனிதனுடன் இருக்கிறது.

10. நல்ல வேலை கிடைத்தபின் கல்யாணம். மனம் நிறைந்த மனைவி கிடைக்கும் போது, இசை, காலை,  மாலை  என மனம் மகிழ்ந்த தருணமெல்லாம் மங்கள் இசை.

11. மனைவி வந்த பிறகு மற்றென்ன? ஆம். மிகச் சரி. குழந்தை. மீண்டும் தாலாட்டு.

12. தந்தையானவன் காலப்போக்கில் தாத்தாவாகிறான். அவனின் வயதுக்கால இசையை கேட்க விரும்புகிறான்.

13. தள்ளாடி தள்ளாடி ஒரு நாள் மீண்டும் மாண்டு விடுகிறான்.  அப்போது அவனுக்கு சொந்த பந்தங்கள் இசை வழி கொண்டு செல்கின்றனர்.

14. இவ்வாறு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசை மனிதனின் மனசாட்சி போல் அவனுடன் வாழ்கிறது.

15. இசையின் மூலம் விலங்குகளை வசமாக்கலாம்.

16. இசை கேட்டு பயிர்கள் நன்கு வளர்வதாக ஆராய்சிகள் கூறுகின்றன.

17. இசை மூலம் நோய்களை குணமாக்கலாம்.

புதிய பாடல் – இசை

வணக்கம்.

சிவனை அடைய சிந்திக்கும் வேளை இது

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் ...

பல்லவி

சிவ தரிசனம் வேண்டும் – எனக்கு

சிவ தரிசனம் வேண்டும்

அனுபல்லவி

பவ சாகரம் கடக்க –

அவ சாகரம் கடக்க – சிவ தரிசனம் வேண்டும் – எனக்கு

சரணம்

விவகாரமாய் மனது செல்லாமல் இருத்திட

தவயோகம் புரிந்து – தன்னலம் தான் திருத்திட

உவகை மிகக் கொண்டு – உன்னதமாய் வாழ

சவயோகம் புரிந்து சிவன் சன்னதி அடைந்திட

– சிவ தரிசனம் வேண்டும் – எனக்கு

சிவ தரிசனம் வேண்டும்

– மீனாட்சி ஜெயகுமார்

Music

இசையென்னும் சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள்.

அகர வரிசையில் இசையின் பெருமை.

Why is Kanchi Maha Periyava Swami popular in India? - Quora

அனைவரையும் மயக்குவது இசை.

ஆண்டவன் அருளே இசை

இசைய வைப்பது இசை

ஈசன் புகழ் பாடுவது இசை

உலகை மயக்கும் இசை

ஊர் போற்றுவது இசை

எண்ணத்தில் எழுவது இசை

ஏகாந்தமாய் அழுவதும் இசை

ஐந்துவகை ஓசை இசை

ஒலிகள் எல்லாம் இசை

ஓங்கார நாதம் இசை

ஓளடதம் தவிர்க்கும் இசை

காஞ்சி மஹா பெரியவா அருள் பார்வை இசை.

– – – பேரா. வே.வெ.மீனாட்சி ஜெயகுமார்.