கிளி

கிளி

Kili

ஆத்தோரம் ஆலமரம்

அதிலேவொரு நடு கிளை

அங்கவொரு கிளிக் குஞ்சு

அழகு கொஞ்சும் சின்னக் கிளி

அந்த கிளி பறந்து பறந்து

அம்மன் மேல அமர போகும்

அந்த கிளியாக நானிருக்க

அம்மா எனக்கு வரங்கொடு

  Prof. V. V. Meenakshi Jayakumar

முருகன்

முருகன்

kili murugan

கிளியே  கிளியே  அருகில் வா

கிளர்ச்சி  பொங்க  அருகில் வா

கிளியே கிளியே  நீ பாடு

கிள்ளைத் தமிழில்  நீ பாடு

முருகா குமரா  என்றே நீ

உருகி மருகி   நீ பாடு

கந்தா கடம்பா  என்றே நீ

மந்தாகினி  போல  நீ பாடு

வள்ளி கணவன்  அவன் பெயரை

துள்ளி துள்ளி  நீ பாடு

தெய்வானை மணாளன்  அவன் பெயரை

தாய்ப்பாசம் பொங்கிட நீ பாடு

அன்பே அருளே அவன் வடிவம்

அருளும் பொருளும் அவன் தருவான்

பண்கொண்டு பாமாலை  நீ பாடு

பண்ணார் மொழியில் நீ பாடு

கிளியே கிளியே அருகில் வா

Prof. V. V. Meenakshi Jayakumar