முருகன்

முருகன்

kili murugan

கிளியே  கிளியே  அருகில் வா

கிளர்ச்சி  பொங்க  அருகில் வா

கிளியே கிளியே  நீ பாடு

கிள்ளைத் தமிழில்  நீ பாடு

முருகா குமரா  என்றே நீ

உருகி மருகி   நீ பாடு

கந்தா கடம்பா  என்றே நீ

மந்தாகினி  போல  நீ பாடு

வள்ளி கணவன்  அவன் பெயரை

துள்ளி துள்ளி  நீ பாடு

தெய்வானை மணாளன்  அவன் பெயரை

தாய்ப்பாசம் பொங்கிட நீ பாடு

அன்பே அருளே அவன் வடிவம்

அருளும் பொருளும் அவன் தருவான்

பண்கொண்டு பாமாலை  நீ பாடு

பண்ணார் மொழியில் நீ பாடு

கிளியே கிளியே அருகில் வா

Prof. V. V. Meenakshi Jayakumar