வணக்கம்.
மாணிக்கவாசகர் – திருவாசகம் என்னும் தேன் தந்தவர்.
திருக்கோவை என்னும் நன்னூல் தந்தவர்.
இறைவன்:
பாலைக் கொடுத்து ஆட்கொண்டது திருஞான சம்பந்தரை
சூலைக் கொடுத்து ஆட்கொண்டது திரு நாவுக்கரசரை
ஓலைக் கொடுத்து ஆட்கொண்டது சுந்தரரை
காலைக் கொடுத்து ஆட்கொண்டது மாணிக்கவாசகரை.
நாலு பேர் போன வழியில் போ என்று நம் பெரியோர் குறிப்பிட்ட நாலு பேர் இவர்கள் தான்.
மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் 51 பதிகங்கள் கொண்டது.
பண் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகிறது.
ஆனால், இசைக் கருவிகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகிறது.
மாணிக்கவாசகரின் பாடல்கள் பாடப்பெறம் இராகங்கள்:
திருவாசகம் – மோகனம்
திருப்பள்ளியெழுச்சி – பூபாளம்
திருப்பொன்னூஞ்சல் – ஆனந்த பைரவி
திருச்சாழல் – ஆனந்த பைரவி, ஆரபி
சிவபுராணம் & பிற அகவல் – சங்கராபரணம்.
மாணிக்கவாசகர் முக்தி
தான் இயற்றிய திருவாசகத்தின் பொருள் தில்லைக் கூத்தனே என்று கூறி தில்லை நடராஜ பெருமானுடன் கலந்தார்.