Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

வளைவினில் முந்தாதே

வாழ்க்கையை

வளைவினில் முந்தாதே

வாழ்க்கையைத் முடிக்காதே

வாழ்வினில் முன்னேறு

சாலை விதி போற்று

தடைகள் ஏதும் இல்லை வேகத்

தடைகளை கவனித்தால்

அலைபேசி எடுக்காதே

வாழ்க்கையை முடிக்காதே.

சாலையில் அலைபேசி

ஆபத்தாய் முடியும் நீ யோசி

அலை அலையாய் அழைப்பு

அடுத்தடுத்து வரலாம்

அழைப்பது நம் வாழ்வின்

அடுத்ததை முடிக்கலாம்.

-சாலையில் எடுக்கும் அலைபேசி

– Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety – Rules

சாலை விதிகள் – பாடல்

படிக்கட்டு பயணம் வேண்டாம்

தறிக்கெட்ட வாழ்க்கை வேண்டாம் – நமக்கு

விடியட்டும் நம் சமுதாயம்

விழிப்புணர்வே நம் தேவை – படிகட்டு

காவல்துறை நம் நண்பன்

கருத்தினில் கொள்வோம் இதனை

போனால் வராதது உயிரே

சாலை விதிகளை மதிப்போம்

சாக்குபோக்கு எதுவும் சொல்ல வேண்டும்

போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாழ்வோம்

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar Continue reading “Songs on Road Safety – Rules”

Songs on Road Safety – Rules

சாலை விதிகள் – பாடல்

சாலை விதிகளை மதித்தால்

தலை எழுத்து நீளுமே

சாலை விதிகளை மீறினால்

தலை எழுத்து மாறுமே

காலை மாலை எப்போதும்

சாலை விதிகளை பின்பற்று

வேலை வீடு செல்லும்போதும்

சாலை விதிகளை பின்பற்று

சோலை அல்ல நெடுஞ்சாலை

காலை வீசி நடந்திட

சோலை அல்ல நெடுஞ்சாலை

பேசிக் கொண்டு நடந்திட

சாலை தனில் தவிர்ப்போம்

அலைபேசி பயன்பாடு

மாலைதனில் வீடுசென்று

வாயாரப் பேசிடலாம்

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

சங்கு

அகர வரிசையில் சங்கின் பெருமை

அமைதியின் வடிவம் சங்கு ஆழ்கடலில் விளைந்த சங்கு இனிய ஒளி எழுப்பும் சங்கு ஈசன் திருமால் கை அமர்ந்த சங்கு

உயர் மக்களை குறிக்கும் நல்வெண் சங்கு

ஊர் உலகிற்கு நேரம் உறைக்கும் சங்கு

எழுவகை இசையை இணைத்து தரும் சங்கு ஏழுமா கடலில் வளரும் உயர்வலம் புரி சங்கு

ஐவகை நிலத்தில் விளையும் சங்கு

ஒப்புயர்வில்லாத பெருமை கொண்டது வலம்புரி சங்கு ஓங்கி ஒலிக்கும் இசை தரும் சங்கு

ஔடதமாய் பல சமயம் பயன்படும் சங்கு

பேராசிரியர் முனைவர் வே.வெ. மீனாட்சி ஜெயக்குமார்

 

 

 

 

 

 

Guru Bhakthi

பல்லவி

மனமே மனமே குருபக்தி செய்

மயக்கம் தீர்க்கும் குருசரண் அடை – மனமே

அனுபல்லவி

சினமே தவிர்த்து தவமே தான் புரி

இனமே புரியாத இன்பநிலை அடை – மனமே

சரணம்

மாநிலத்தில் இருந்து குருபக்தி இல்லாமல்

மாதவம் செய்தாலும் பயன் ஏதும் இல்லை.

காமியத்தில் அமிழ்ந்து இளைக்காமல் காத்திடுவார்

சாமியாகி வந்து நம்மை கரையே ஏற வைப்பார் எனவே

 

Prof. V.V.Meenakshi Jayakumar

pongaloo pongal

பொங்கல் பாட்டு

பொங்கலிட்டு நாம் மகிழ்வோம்

பொங்கலிட்டு நாம் மகிழ்வோம்

தை பொறந்தா சேதி வரும்

தை பொறந்தா சேதி வரும்

தன்னே………….

 

பொங்கல் வச்சி மகிழ்ந்திடுவோம்

பொங்கல் பொங்க பாடிடுவோம்

பாங்கு கொண்டு ஆடிடுவோம்

பாட்டுப் பாடி மகிழ்ந்திடுவோம்

தன்னே………….

 

பண்ணு கொண்டு பாடிடுவோம்

பண்ணு கொண்டு பாடிடுவோம்

பல ஆட்டம் ஆடிடுவோம்

ஒயிலாட்டம் ஆடிடுவோம்

தன்னே………….

 

வீட்டை வெள்ளை அடிச்சிடலாம்

வீட்டை வெள்ளை அடிச்சிடலாம்

பாட்டு பாடி மகிழ்ந்திடலாம்

பாட்டு பாடி மகிழ்ந்திடலாம்

தன்னே………….

போகியில தீயவற்றை

போகட்டும்னு எரித்திடுவோம்

நல்வகைகள் நம்மைத்தேடி

தன்னாலே வந்திடுமே

தன்னே………….

 

கரகம் எடுத்து நாம் மகிழ்வோம்

கரகம் எடுத்து நாம் மகிழ்வோம்

காளையத்தான் அடக்கிடுவோம்

காளையத்தான் அடக்கிடுவோம்

தன்னே………….

 

காணும் பொங்கல் காணவே

கடற்கரைக்கு சென்றிடுவோம்

கரும்பவெட்டி நாம் திண்போம்

விரும்பி நீயும் சாப்பிடவா

தன்னே………….

 

ஜாதி மத பேதங்கள்

ஊதி நாம வெறட்டிடுவோம்

ஜாதி மத பேதங்கள்

ஊதி நாம வெட்டிடுவோம்

தன்னே………….

 

மாடு கட்டி போர் அடிப்போம்

மாடு கட்டி போர் அடிப்போம்

காடு மல காத்திடுவோம்

காடு மல காத்திடுவோம்

தன்னே………….

 

காலை வரும் சூரியனை

கையெடுத்து கும்பிடுவோம்

மாலை வரும் சந்திரன

மனசார ரசிச்சிடுவோம்

தன்னே………….

 

திருக்குறளை பாடிடுவோம்

திருமுறைகள் ஓதிடுவோம்

வள்ளுவரை வணங்கிடுவோம்

வாழ்க்கையிலே உயர்ந்திடுவோம்

தன்னே………….

 

தேவாரங்கள் பாடிடுவோம்

மூவாரங்கள் பாடிடுவோம்

பட்டி மாட்ட காத்திடுவோம்

பட்டி மாட்ட காத்திடுவோம்

தன்னே………….

 

தமிழ்பாட்டு பாடிடலாம்

தமிழ்பாட்டு பாடிடலாம்

தரமாக வாழ்ந்திடலாம்

தமிழ்பாட்டு பாடிடலாம்

தன்னே………….

Prof. V.V.Meenakshi Jayakumar

Mahatma Gandhi – great Soul

பல்லவி

 

காந்தியைப் போல் ஒரு

சாந்தசொரூபனை காண்பதும் எளிதாமோ?

  • மகாத்மா

அனுபல்லவி

மாந்தரிலே ஞானயோகம் மேலும் தவ

வேந்தரிலே சுயநலம் சிறிதுமில்லா

  • காந்தியைப்

 

சரணம்

அகிம்சைத்தனிலே புத்தரவர்

ஆத்ம சோதனையில் ஏசுநாதரவர்

அறுபகையும் வென்ற கர்ம வீரர் அவர் நமக்கு

பாக்கியத்தால் கிட்டிய நாட்டில் அவதரித்த

  • காந்தியைப்

 

சரணம் 2

குழந்தை உள்ளமும் அன்பு கனிந்த மொழியும் கொண்டு

கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்

இயல்பாய் புரியும் மோகன புன்னகையும்

தவழ பகைவரும் கண்டஞ்சும் சுதன் இனிமேல்

  • காந்தியைப் போல ஒரு

 

Jai Hind.. Jai Hind ..Jai Hind

மெட்டு: பாரத சமுதாயம் வாழ்கவே!

பாரத சமுதாயம் வாழ்கவே

சுதந்திரம் தனைப் பெற்றோம்

சுதந்திரம் தனைப் பெற்றோம் – பெற்ற

சுதந்திரத்தினை பேணி நாம் காப்போம் – பாடு பட்டு பெற்ற

சுதந்திரத்தினை பேணி நாம் காப்போம்

மத ஜாதி வேற்றுமையை களைந்து நாம் வாழ்வோம்

மத ஜாதி வேற்றுமையை களைந்து நாம் வாழ்வோம்

எழுபத்தி ஐந்து ஆண்டுகளில் பல வித உயர்வடைந்தோம்

எழுபத்தி ஐந்து ஆண்டுகளில் பல வித உயர்வடைந்தோம்

எழுச்சியுடன் உழைத்து நாம் வல்லரசாக மாறுவோம்

எழுச்சியுடன் உழைத்து நாம் வல்லரசாக மாறுவோம்

வல்லரசாக மாறுவோம்..

நாம் வல்லரசாக மாறுவோம்.

பாரத சமுதாயம் வாழ்கவ! வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே!  ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே!.

 

Prof.V.V.Meenakshi Jayakumar

Do not forget to vote – ஓட்டு போட மறவாதீர்

ஓட்டு போடு

ஓட்டு போடு  ஓட்டு போடு மறக்காம ஓட்டு போடு

நாட்டு மக்கள் நலம் பெறவே மறக்காம ஓட்டு போடு

காசு பணம் வாங்காம கருத்தாக ஓட்டு போடு

மாசு இல்லா அரசாங்கம் அமைந்திடவே ஓட்டு போடு

வரிசையில நின்னு நீயும் மை வைச்சு ஓட்டு போடு

கண்ணியமான   அரசு  அமைய கண்டிப்பா ஓட்டு போடு

பதினெட்டு வயசான போதும் நீயும் ஓட்டு போடு

பதிவு செய்து அனுப்பியாச்சும் பாங்காக ஓட்டு போடு

 Prof. V.V.Meenakshi Jayakumar

Krishna Rama Rama Krishna

 

ராம நாமம்  கிருஷ்ண நாமம்

நல்ல மருந்து ராம நாமம்

நல்ல மருந்து கிருஷ்ண நாமம்

ஏழ்மையை நீக்கும் ராம நாமம்

ஏற்றம் பல தரும் கிருஷ்ண நாமம்

சமதர்மம் அளிப்பது இராம நாமம்

சமுதாய வெற்றிக்கு கிருஷ்ண நாமம்

சீதையை காத்தது ராம ராமம்

கோதை உணர்த்திய கிருஷ்ண நாமம்

அனுமன் சொல்வது இராம நாமம்

அறியாமை போக்குவது கிருஷ்ண நாமம்

பக்தி அளிப்பது ராம நாமம்

பக்தரைக் காப்பது கிருஷ்ண நாமம்

ஓசை ஒலிமெல்லாம் ராம நாமம்

ஓங்கார உட்பொருள் கிருஷ்ண நாமம்

பாரதம் கண்டது ராம நாமம்

பண்பைத் தருவது கிருஷ்ண நாமம்

PROF. V.V. MEENAKSHI JAYAKUMAR