பல்லவி
குருபக்தி செய்வாய் மனமே – தினமே
குருபக்தி செய்வாய் மனமே – குருபக்தி
அனுபல்லவி
குருபக்தி செய்ய செய்ய வினை அகற்றிடும்
குருபக்தி செய்ய செய்ய வினை கழிந்திடும் – குருபக்தி
சரணம்
உருவம் கொண்டு வந்த இறைவனே குரு அவர்
மருமாசு ஏதுமின்றி குருவைச் சரணடை
கருவினைத் தோன்றாமல் காக்கும் கண்கண்ட தெய்வம்
இருவினைத் தீர்த்து இறைவன் தான் சேர்க்கும் எனவே
Prof. V.V.Meenakshi Jayakumar