Songs on Road Safety – Rules

சாலை விதிகள் – பாடல்

சாலை விதிகளை மதித்தால்

தலை எழுத்து நீளுமே

சாலை விதிகளை மீறினால்

தலை எழுத்து மாறுமே

காலை மாலை எப்போதும்

சாலை விதிகளை பின்பற்று

வேலை வீடு செல்லும்போதும்

சாலை விதிகளை பின்பற்று

சோலை அல்ல நெடுஞ்சாலை

காலை வீசி நடந்திட

சோலை அல்ல நெடுஞ்சாலை

பேசிக் கொண்டு நடந்திட

சாலை தனில் தவிர்ப்போம்

அலைபேசி பயன்பாடு

மாலைதனில் வீடுசென்று

வாயாரப் பேசிடலாம்

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Swami Dakshinamoorthy Life and contribution

திரு. கிரிதரன் அவர்களின் இயக்கத்தில் மலர்ந்த

சுவாமி தட்சிணாமூர்த்தி அவர்களின் வாழ்வும் வாக்கும்

இசை நாடகம் – ஓரு மீள்பார்வை

File:V. Dakshinamoorthy.jpg - Wikimedia Commons

அழகாக திட்டமிட்டு தீட்டப்பட்ட காவியம்

ஆன்மீக அன்பர்களுக்கு இது ஒரு சொல் ஓவியம்

இசை ரசிகர்களுக்கு இனியதொரு வரப்பிரசாதம்

“ஈஸ்வரன் அருள்தான் எல்லாம்“ என்ற உன்னத எண்ணம் கொண்ட

உயர் பெரியவர் சுவாமிகளின்  இசை வாழ்வு ஓர் அற்புத வரலாறு

ஊர் உலகம் அனைத்திலும் இவர் புகழ் பரவ வேண்டும்

எளிய நாடக அரங்க அமைப்பும் ஒரு சாதனை

ஏற்ற இற(ர)க்கம் நிறைந்த வசன உச்சரிப்போ – ஒரு நல்ல போதனை

ஐயமேயில்லை – “வைக்கம் தாதா அன்னதான பிரபோ கோஷம்“  இ(எ)ன்றும்  நம் செவியில்

ஒன்று மட்டும் உறுதி – சுவாமியின் வாழ்க்கை ஒரு சரித்திர இசைப் பயணம்

ஓங்கார நாதம் அவர் மூச்சில் – பேச்சில் – பாட்டில்

ஔடதம் இப்பிறவிக்கு சுவாமி தட்சிணாமூர்த்தி அவர்களின் பாடல் என்பது

ஆன்மீக அன்பர்களின் மெய்யான கூற்று!!!!

முனைவர். வே. வெ. மீனாட்சி