பரசுராமர்

பரசுராமர்

எடுப்பு

பரசுராமர் வந்தார் பார் ஆளும் வேந்தரின் கர்மமதை தீர்க்கவே – பரசுராமர் வந்தார்

தொடுப்பு

அரசர் குலத்தினை அடியோடு ஒழித்திட

கரமதில் கோடாரி கொண்டு தவம் புரிந்த – பரசுராமர் வந்தார்

முடிப்பு

ஜமத்தினி முனிவரின் திருமகனாய் தோன்றி

ஏமத்தில் ஜாமத்திலும் தந்தை சொல் காத்தார்

காமனை அழித்து வைணவ வில் கொண்டார்

ராமனுக்கு தன் வில்லை தந்தருள்  புரிந்த – பரசுராமர் வந்தார்

Prof. V. V. Meenakshi Jayakumar

நல்ல நல்ல செய்தி வரும்

நல்ல நல்ல செய்தி வரும்

நல்ல நல்ல செய்தி வரும் – இனி

நல்ல நல்ல செய்தி வரும்

மெல்ல மெல்ல அமைதி வரும் – இனி

மெல்ல மெல்ல அமைதி வரும்

சொல்ல சொல்ல இனிக்கும் நாமம் – அது ராமனின் திருநாமம்

கொல்ல கொல்ல வரும் யமனை தூர தூக்கிச் செல்லும் திரு நாமம்

Prof. V. V. Meenakshi Jayakumar

அனுமன்

அனுமன்

hanuman

அஞ்சனை மைந்தன் அனுமன் அவன்

ஆதி சிவனின் அம்சமவன்

இந்துஸ்தானி இசையின் தந்தை அவன்

ஈரெழுத்து மந்திரத்தின் சொந்தமவன்

உண்மை பிரம்மசாரியவன்

ஊதிய தாடை கொண்டவனாம்

எதிலும் எங்கும் இராமனையே

எப்போதும் காணும் கண் கொண்டவன்

ஏழு பிறப்பில்லா சிரஞ்சீவி அவன்

ஐயன் இராமனே அவன் கடவுள்

ஒருமுகப்பெற்ற உள்ளம் கொண்டவன்

ஓங்கி பறக்கும் கொடியில் இருப்பவன்

ஔவை தெய்வமாம் பிள்ளையாருடன்

ஆதிஅந்த பெருமாளாய் அருள்புரிபவன்

காஞ்சி மஹா பெரியவா கண்டுரைத்த மடத்தின் எதிர் தூணில் ஆசி அருள்பவர்  ஜெய் அனுமான்

Prof. V. V. Meenakshi Jayakumar