Go to temple – Visit a temple – Daily Routine.

பல்லவி

கோயில் வாசல் வருவேனோ? – உன் திருக்

கோயில் வாசல் வருவேனோ?

அனுபல்லவி

தாயின் சொல் கேளாய் பிள்ளையாய் வளர்ந்தேன்

நோய் நொடி தாக்கி மூப்பு வரும் முன்னே – கோயில் வாசல்

வருவேனோ?

சரணம்

வாயில் வந்து நின்றால் போதும் நாயேன் வாழ்வு கடைத்தேறும்

போயும் போயும் இந்த இழி பிறவி வேண்டவே வேண்டாம். – இனி

சாயும் இவ்வுடல் கொண்டு சதானந்தன் அடி பணிந்து

தீயில் வேகும் வரை நின் நினைப்பொன்றே போதும் போதும்

 

Prof.V.V.Meenakshi Jayakumar

Do not forget to vote – ஓட்டு போட மறவாதீர்

ஓட்டு போடு

ஓட்டு போடு  ஓட்டு போடு மறக்காம ஓட்டு போடு

நாட்டு மக்கள் நலம் பெறவே மறக்காம ஓட்டு போடு

காசு பணம் வாங்காம கருத்தாக ஓட்டு போடு

மாசு இல்லா அரசாங்கம் அமைந்திடவே ஓட்டு போடு

வரிசையில நின்னு நீயும் மை வைச்சு ஓட்டு போடு

கண்ணியமான   அரசு  அமைய கண்டிப்பா ஓட்டு போடு

பதினெட்டு வயசான போதும் நீயும் ஓட்டு போடு

பதிவு செய்து அனுப்பியாச்சும் பாங்காக ஓட்டு போடு

 Prof. V.V.Meenakshi Jayakumar