சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

Murugar

பாப்பா பாப்பா சொல்லு பாப்பா (2)

கந்தா குமரா என்றே சொல்லு பாப்பா

இப்போ அப்போ எப்போதும் சொல்லு பாப்பா

கார்த்திகை குமரன்பேர் சொல்லு பாப்பா

நில்லு பாப்பா நீ நில்லு பாப்பா

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

 

கந்தா குமரா என்று நீ சொல்லு பாப்பா

அல்லும் பகலும் சொல்லு பாப்பா

வள்ளி மணாளன் பெயர் நீ சொல்லு பாப்பா

நில்லு பாப்பா நீ நில்லு பாப்பா

 

நித்தமும் அவன் புகழ்  பாடு பாப்பா

நல்லதெல்லாம் தானே வரும் நம்பு பாப்பா

நீதி நெறியின் பக்கம் நில்லு பாப்பா

 

பாரு பாப்பா நீ பாரு பாப்பா

பாங்கான முருகனை  பாரு பாப்பா

ஆறு முகன் அவனே தெய்வம் நம்பு பாப்பா

ஆவினன் குடி வந்து பாரு பாப்பா

 

ஓடு பாப்பா நீ ஓடு பாப்பா

ஓங்கார பரமன் அடி தேடி ஓடு பாப்பா

ஆடு பாப்பா நீ ஆடு பாப்பா

ஆடும் மயில் சோலை வந்து ஆடு பாப்பா

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

முருகன் என் தெய்வம் என்று சொல்லு பாப்பா

 

கல்லு பாப்பா நீ கல்லு பாப்பா

கருணை இல்லா உள்ளம் கொண்டால் கல்லு பாப்பா

வெல்லு பாப்பா நீ வெல்லு பாப்பா

வேலுண்டு வினையில்லை வெல்லு பாப்பா

வேண்டாத காமத்தை கொல்லு பாப்பா

வேலன் திருவடி கதியென நில்லு பாப்பா

 

முனைவர். வே. வெ. மீனாட்சி ஜெயக்குமார்

ஏறுமயில்

ஏறுமயில்

ஏறுமயில்

ஆகமும் சாஸ்திரமும் தேடு பொருள் நீயே

பாகம் ஒரு பெண்ணாகி நின்றவனும் நீயே

 

ஏகன் அநேகன் ஆகி இருப்பவனும் நீயே

தாகமென வருவோர்க்குத் தண்ணீரும் நீயே

 

காகமும் மயிலுமாய் இருப்பவனும் நீயே

யோகமும் போகமுமாய் உள்ளவனும் நீயே

 

காரணமும் காரியமும் ஆனவனும் நீயே

நாரணனும் நான்முகனும் ஆனவனும் நீயே

 

பூரணனும் புண்ணியனும் வேதியனும் நீயே

ஆரணனும் சாரணனும் ஆனவனும் நீயே

 

தோடுடைய செவியனும் கொற்றவையும் நீயே

வீடுடைய தலைவனும் தலைவியும் நீயே

 

ஆடுடைய குபேரனும் லஷ்மியும் நீயே – பண்

பாடுடைய தமிழ்நாட்டின் தெய்வமும் நீயே

 

Prof. V. V. Meenakshi Jayakumar