Karthikeyan

கார்த்திகேயன்

karthikeyan

கங்கையின் புதல்வன் கார்த்திகேயன்

மங்கையர் வணங்கிய  வள்ளி மணாளன்

பங்கையர் கண்ணி தேவானை நாயகன்

சங்கையர் நாதன் வடிவில் உள்ளோன்

 

எங்களின் குலதெய்வம் முருகப் பெருமான்

உங்களின் துயர் நீக்கும் கருணைக்கடவுள்

திங்களின் மேனி உடைய வள்ளியின்

பங்கினில் உறையும் பரம குருநாதன்

 

அங்கையில் வேல்கொண்டு ஆடும் முருகன்

எங்கேயும் எங்களை காக்கும் தெய்வம்

மங்கையரின் புகழ் கீர்த்தி வாய்ந்த

ஓங்கு புகழ் பாடும் அருணகிரிநாதர்

Prof. V. V. Meenakshi Jayakumar

ஏறுமயில்

ஏறுமயில்

ஏறுமயில்

ஆகமும் சாஸ்திரமும் தேடு பொருள் நீயே

பாகம் ஒரு பெண்ணாகி நின்றவனும் நீயே

 

ஏகன் அநேகன் ஆகி இருப்பவனும் நீயே

தாகமென வருவோர்க்குத் தண்ணீரும் நீயே

 

காகமும் மயிலுமாய் இருப்பவனும் நீயே

யோகமும் போகமுமாய் உள்ளவனும் நீயே

 

காரணமும் காரியமும் ஆனவனும் நீயே

நாரணனும் நான்முகனும் ஆனவனும் நீயே

 

பூரணனும் புண்ணியனும் வேதியனும் நீயே

ஆரணனும் சாரணனும் ஆனவனும் நீயே

 

தோடுடைய செவியனும் கொற்றவையும் நீயே

வீடுடைய தலைவனும் தலைவியும் நீயே

 

ஆடுடைய குபேரனும் லஷ்மியும் நீயே – பண்

பாடுடைய தமிழ்நாட்டின் தெய்வமும் நீயே

 

Prof. V. V. Meenakshi Jayakumar