நெடுங்குண இராமர்

நெடுங்குண இராமர்

இராகம் : வசந்தா                           தாளம் : ஆதி

பல்லவி

நெஞ்சில் சின்முத்திரை காட்டும் இராமா

தஞ்சமென்று உனை அடைந்தேன் நெடுங்குண இராமா

நெஞ்சில்

அனுபல்லவி

வஞ்சமிலா மனம் கொண்ட உறவினைத் தருவாய்

பஞ்சம் பிணி ஏதுமின்றி உலகினைக் காப்பாய்-நெஞ்சில்

நெஞ்சில்

சரணம்

அஞ்சேல் நீ என்று அடைக்கலம் தருவாய்

வஞ்சிக் கொடி செங்கமல தாயாரின் தெய்வமே

சஞ்சலமற்ற தம்பி லட்சுமணன் உடன் இருக்க

அஞ்சனை மைந்தன் இராமாயணம் படிக்க

– நெஞ்சில் சின்முத்திரை

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

அனுமன்

அனுமன்

hanuman

அஞ்சனை மைந்தன் அனுமன் அவன்

ஆதி சிவனின் அம்சமவன்

இந்துஸ்தானி இசையின் தந்தை அவன்

ஈரெழுத்து மந்திரத்தின் சொந்தமவன்

உண்மை பிரம்மசாரியவன்

ஊதிய தாடை கொண்டவனாம்

எதிலும் எங்கும் இராமனையே

எப்போதும் காணும் கண் கொண்டவன்

ஏழு பிறப்பில்லா சிரஞ்சீவி அவன்

ஐயன் இராமனே அவன் கடவுள்

ஒருமுகப்பெற்ற உள்ளம் கொண்டவன்

ஓங்கி பறக்கும் கொடியில் இருப்பவன்

ஔவை தெய்வமாம் பிள்ளையாருடன்

ஆதிஅந்த பெருமாளாய் அருள்புரிபவன்

காஞ்சி மஹா பெரியவா கண்டுரைத்த மடத்தின் எதிர் தூணில் ஆசி அருள்பவர்  ஜெய் அனுமான்

Prof. V. V. Meenakshi Jayakumar