ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?

இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

பா

  1. ஐவகை நிலங்களில் மணலும் மணல் சார்ந்த இடத்தின் யாழ்
  2. 18 சித்தர்களில் ஒருவர்
  3. …………………….. நாடு பழம்பெரும் நாடு
  4. சியாமா சாஸ்திரியின் புகழ்பெற்ற மத்யமாவதி இராக கீர்த்தனை
  5. ஐந்தாவது சக்கரத்தின் பெயர்
  6. பாரதியார் எழுதிய சபதம்
  7. கல்கி இசை குறித்து எழுதியது “ஆடல்………………………”
  8. பல சிறந்த பாடல்கள் எழுதிய சிவனின் ஊர்
  9. “இருண்ட வீடு” எழுதியவர்
  10. நந்தனார் சரித்திரம் எழுதியவர் கோபாலகிருஷ்ண ………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *