ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?

இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

வா

  1. இசை, இயல் புலவர்களை இப்படி அழைப்பர் (பாட்டும் மெட்டும் அமைப்போர்)
  2. மருந்தீஸ்வரர் அருள்பாலிக்கும் சென்னையில் உள்ள ஊர்?
  3. தசாவதாரங்களின் ஐந்தாவது அவதாரம்
  4. 34வது மேள கர்த்தா இராகம்
  5. ஆண்டாள் கண்ணனை கைப்பிடிக்கும் கனவின் முதல் பாடல்
  6. 64வது மேள கர்த்தா இராகம்
  7. இசை பரப்பும் ரேடியோவின் தமிழ்ப் பெயர்
  8. தீக்ஷிதரின் புகழ்பெற்ற ஹம்சத்வனி ராக கணபதி பாடல்
  9. குரலிசையின் மற்றொரு பெயர்
  10. தியாகராஜரின் புகழ்பெற்ற சீடர், நனுபாலிம்ப கிருதிக்கு காரணமாக வெங்கடரமண பாகவதரின் ஊர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *