என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய் ஆவிகாத் திடுவாய்
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன் புலப் படுத்தும் புலனா மென்னை
உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்
இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்.
- பாரதியார்