Dear all nameste..
Do you know the reason why this world, earth is still here … the reasons are:
உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்
அமிழ்ந்த மியைவ தாயினும் மினிதெனத்
தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளளல ரயர்விலர்
அன்ன மாட்சி யனையராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கௌ முயலுந ருண்மை யானே.
- கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி, புறநானூறு 182
அமிழ்தம் தெய்வத்தாலோ, தவத்தாலோ தமக்கு வந்து கூடுவதாயினும், அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலும் இலர்;
யாரோடும் வெறுப்பிலர்;
பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி,
அது தீர்த்தற் பொருட்டு சோம்பியிருத்தலும் இலர்;
புகழ் கிடைக்குமாயின் தம் உயிரையும் கொடுப்பர்;
பழியெனின் அதனால் உலகம் முழுதும் பெறினும் கொள்ளார்; மனக்கவலை இல்லார்;
அத்தகைய மாட்சிமைப்பட்ட தன்மையராய்,
தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் சான்றோர் உளராதலால் இவ்வுலகம் இருக்கின்றது.
the world here because of selfless people and by their discipline.. we must have the quality of selfishlessness…..Dr.V.Meenakshi Jayakumar