இசை – இசை நாடகம்

வணக்கம்.

அடியார் புராணம்

திரு நாளைப் போவார்….

சற்றே விலகியிரும் பிள்ளாய் – சன்னிதானம் மறைக்குதாமே – நீ
நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்.

சாதி முறைமை பேசுறான் தன்னை இகழ்ந்துமேசுறான்

கோதில்லா குணமுடையோன் கோபங்கொண்டால் தாள மாட்டாய்……

சற்றே விலகியிரும் பிள்ளாய் – சன்னிதானம் மறைக்குதாமே – நீ
நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்.

வேத குலத்தை போற்றுறான் விரும்பி விரும்பி ஏற்றுறான்

பூதலத்தில் இவனைப் போலே புண்ணிய புருஷ னொருவனில்லை……

சற்றே விலகியிரும் பிள்ளாய் – சன்னிதானம் மறைக்குதாமே – நீ
நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்.

பக்தியில் கரைக் கண்டவன் பார்த்து பார்த்து உண்பவன்

சித்தங் குறையில் நமது செல்வம் முற்றங்குறையும் தயவுசெய்து…

சற்றே விலகியிரும் பிள்ளாய் – சன்னிதானம் மறைக்குதாமே – நீ
நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்.

ஒரு சிறந்த பக்தரின் கதை – நந்தனார் ...

—- கோபால கிருஷ்ண பாரதியார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *