பொங்கல் பாட்டு
பொங்கலிட்டு நாம் மகிழ்வோம் பொங்கலிட்டு நாம் மகிழ்வோம்
தை பொறந்தா சேதி வரும் தை பொறந்தா சேதி வரும்
தன்னே………….
பொங்கல் வச்சி மகிழ்ந்திடுவோம் பொங்கல் பொங்க பாடிடுவோம்
பாங்கு கொண்டு ஆடிடுவோம் பாட்டுப் பாடி மகிழ்ந்திடுவோம்
தன்னே………….
பண்ணு கொண்டு பாடிடுவோம் பண்ணு கொண்டு பாடிடுவோம்
பல ஆட்டம் ஆடிடுவோம் ஒயிலாட்டம் ஆடிடுவோம்
தன்னே………….
வீட்டை வெள்ளை அடிச்சிடலாம் வீட்டை வெள்ளை அடிச்சிடலாம்
பாட்டு பாடி மகிழ்ந்திடலாம் பாட்டு பாடி மகிழ்ந்திடலாம்
தன்னே………….
போகியில தீயவற்றை போகட்டும்னு எரித்திடுவோம்
நல்வகைகள் நம்மைத்தேடி தன்னாலே வந்திடுமே
தன்னே………….
கரகம் எடுத்து நாம் மகிழ்வோம் கரகம் எடுத்து நாம் மகிழ்வோம்
காளையத்தான் அடக்கிடுவோம் காளையத்தான் அடக்கிடுவோம்
தன்னே………….
காணும் பொங்கல் காணவே கடற்கரைக்கு சென்றிடுவோம்
கரும்பவெட்டி நாம் தின்போம் விரும்பி நீயும் சாப்பிடவா
தன்னே………….
ஜாதி மத பேதங்கள் ஊதி நாம வெறட்டிடுவோம்
ஜாதி மத பேதங்கள் ஊதி நாம வெட்டிடுவோம்
தன்னே………….
மாடு கட்டி போர் அடிப்போம் மாடு கட்டி போர் அடிப்போம்
காடு மல காத்திடுவோம் காடு மல காத்திடுவோம்
தன்னே………….
காலை வரும் சூரியனை கையெடுத்து கும்பிடுவோம்
மாலை வரும் சந்திரன மனசார ரசிச்சிடுவோம்
தன்னே………….
திருக்குறளை பாடிடுவோம் திருமுறைகள் ஓதிடுவோம்
வள்ளுவரை வணங்கிடுவோம் வாழ்க்கையிலே உயர்ந்திடுவோம்
தன்னே………….
தேவாரங்கள் பாடிடுவோம் மூவாரங்கள் பாடிடுவோம்
பட்டி மாட்ட காத்திடுவோம் பட்டி மாட்ட காத்திடுவோம்
தன்னே………….
தமிழ்பாட்டு பாடிடலாம் தமிழ்பாட்டு பாடிடலாம்
தரமாக வாழ்ந்திடலாம் தமிழ்பாட்டு பாடிடலாம்
தன்னே………….
— Prof. V.V. Meenakshi Jayakumar