அபிராமி அருள் 3

அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமி தோன்றுதல்
தோன்றியது அமிர்தம் தேவர்கள் வியக்க – தாமரை
தோன்றிய நாயகன் மொழிந்தான் – “ நல்ல பசி
தோன்றிய புலியும் கொழுத்த மானும் ஒரே துறையில்
நீர் அருந்தும் இடம் எதுவோ அதுவே – பாற்கடல்
அமுதம் பகிர்ந்துண்ண ஏற்ற இடம்” என்று

புராண காலம் முதல் இருப்பது
காரணப்பெயரைத் தான் கொண்டது
பரமன் முதல் பலர் பூஜித்தது
வயது ஆயுளை அதிகரிப்பது
வில்வனம் என்ற பெயர்க் கொண்டது
பற்பல உயிர்களும் பகையின்றி வாழும் இடம்

வந்தனரே தேவர்கள் வந்தனரே – அமுதுண்டு
இறப்பின்றி இளமையுடன் என்றும் வாழ
வந்தனரே தேவர்கள் வந்தனரே
சென்றனரே வில்வவனம் சென்றனரே
திருமாலுடன் தேவர்களும் அமுதம் தனைப் பெறவேண்டி
சென்றனரே அங்குச் சென்றனரே

விதி வசத்தால் அமுதக் குடம் லிங்கமானது
விதி வசத்தால் அமுதக் குடம் லிங்கமானது
திருக்கடவூர் நாதர் அங்குத் தோன்றினார்
அமிர்த கடேஸ்வரர் அங்குத் தோன்றினார்

உலக உயிர்களைக் காத்திட வேண்டி
உத்தமன் திருமாலின் ஆபரணத்தில் இருந்து
உதயமானாள் அபிராமி உதயமானாள்

— PROF.DR. V. V. MEENAKSHI JAYAKUMAR