ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன? இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.
அ
- சியாமா சாஸ்திரிகளின் சீடர் கிருஷ்ணய்யரின் ஊர்
- அவ்வையார் விநாயகர் மேல் பாடியது விநாயகர் …….
- சப்த தாளங்களில் 6வது தாளம்
- பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலை
- பாஷாங்க ,ராகம் என்பது இந்த ஸ்வரத்தை கொண்டிருக்கும்
- அடாணா இராகம் பாடி புகழ்பெற்றவர்?
- மூன்றாவது சக்கரத்தின் பெயர்
- நாதத்தில் ஒரு வகை
- முத்துஸ்வாமி தீஷிதர் அறிமுகப்படுத்திய இராகம்
- குடமுனி என்று பெயரெடுத்தவர்