அனுமன்
அஞ்சனை மைந்தன் அனுமன் அவன்
ஆதி சிவனின் அம்சமவன்
இந்துஸ்தானி இசையின் தந்தை அவன்
ஈரெழுத்து மந்திரத்தின் சொந்தமவன்
உண்மை பிரம்மசாரியவன்
ஊதிய தாடை கொண்டவனாம்
எதிலும் எங்கும் இராமனையே
எப்போதும் காணும் கண் கொண்டவன்
ஏழு பிறப்பில்லா சிரஞ்சீவி அவன்
ஐயன் இராமனே அவன் கடவுள்
ஒருமுகப்பெற்ற உள்ளம் கொண்டவன்
ஓங்கி பறக்கும் கொடியில் இருப்பவன்
ஔவை தெய்வமாம் பிள்ளையாருடன்
ஆதிஅந்த பெருமாளாய் அருள்புரிபவன்
காஞ்சி மஹா பெரியவா கண்டுரைத்த மடத்தின் எதிர் தூணில் ஆசி அருள்பவர் ஜெய் அனுமான்
Prof. V. V. Meenakshi Jayakumar