பாரத சமுதாயம் வாழ்கவே

மெட்டு: பாரத சமுதாயம் வாழ்கவே!
பாரத சமுதாயம் வாழ்கவே
சுதந்திரம் தனைப் பெற்றோம்
சுதந்திரம் தனைப் பெற்றோம் – பெற்ற
சுதந்திரத்தினை பேணி நாம் காப்போம் – பாடு பட்டு பெற்ற
சுதந்திரத்தினை பேணி நாம் காப்போம்
மத ஜாதி வேற்றுமையை களைந்து நாம் வாழ்வோம்
மத ஜாதி வேற்றுமையை களைந்து நாம் வாழ்வோம்
எழுபத்தி ஐந்து ஆண்டுகளில் பல வித உயர்வடைந்தோம்
எழுபத்தி ஐந்து ஆண்டுகளில் பல வித உயர்வடைந்தோம்
எழுச்சியுடன் உழைத்து நாம் வல்லரசாக மாறுவோம்
எழுச்சியுடன் உழைத்து நாம் வல்லரசாக மாறுவோம்
வல்லரசாக மாறுவோம்..
நாம் வல்லரசாக மாறுவோம்.
பாரத சமுதாயம் வாழ்கவ! வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே! ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே!.

vote …vote…vote

ஓட்டு போடு
ஓட்டு போடு ஓட்டு போடு மறக்காம ஓட்டு போடு
நாட்டு மக்கள் நலம் பெறவே மறக்காம ஓட்டு போடு
காசு பணம் வாங்காம கருத்தாக ஓட்டு போடு
மாசு இல்லா அரசாங்கம் அமைந்திடவே ஓட்டு போடு
வரிசையில நின்னு நீயும் மை வைச்சு ஓட்டு போடு
கரிசனமான அரசு அமைய கண்டிப்பா ஓட்டு போடு
பதினெட்டு வயசான போதும் நீயும் ஓட்டு போடு
பதிவு செய்து அனுப்பியாச்சும் பாங்காக ஓட்டு போடு