அழகு தெய்வமாக வந்து—
காவடிச் சிந்து—செஞ்சுருட்டி
அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் — அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன்—நல்ல
அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குஹன்
அரனார் குருவாம் உயர் ஸீலன்—என்றும் அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்
குழந்தையாகக் குமரனாகக்
கோவணாடைத் துறவியாகக் கோலம் கொள்ளும் காக்ஷி என்ன சொல்வேன்?– கண்டு கூறும் மாய வினைகள் யாவும் வெல்வேன்– இந்தக் குவலயத்திலோர் கலியுகப் பெருவரதனாய்த்
திகழ்ந்தருளும் கந்தனைக் கும்பிட்டென்றன் பிணிகள் நீங்கி மகிழ்வேன்- உள்ளக் குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்
நீல மயில் மீதில் ஏறி ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் — அவன் நித்திலப் புன்முறுவல் வள்ளி நேசன் – இந்த
நீள் நிலந்தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன்— தூரன்
நெஞ்சை நீங்காதென்றும் அங்கு வாசன்
This song is taken from the book “Murugan Arulmani Malai – Periasamy Thooran