வணக்கம்
…..குரு பக்தி செய்வாய் மனமே…
பல்லவி
மனமே மனமே மனமே மனமே குருபக்தி செய்திடுவாய் நீயே
மயக்கம் தீர்க்கும் குருவின் சரணை அன்புடன் இனி அடைவாய் நீயே
அனு பல்லவி
சினமே தவிர்த்து தவமே தான் புரிவாய் –
குருவின் அருள் உண்டு கலங்காதே
இனமே புரியா இன்ப நிலை அடைவாய்
குருவின் அருள் உண்டு மயங்காதே
— மனமே மனமே மனமே மனமே குருபக்தி
சரணம்
மானிடனாய் பிறந்து குருபக்தி இல்லாமல்
மாதவம் செய்தாலும் பயன் இல்லை
காமியதில் அமிழ்ந்து இளைக்காமல் காக்கும் – குரு
சாமி அருள் காக்கும் எம பயமில்லை ..
மனமே மனமே மனமே மனமே குருபக்தி செய்.
– மீனாட்சி ஜெயகுமார்.