Yoga day special

யுஜ் என்னும் சமஸ்கிருத சொல்லில் இருந்த வந்த யோகா என்னும் சொல்லுக்கு, தனிப்பட்டவரின் நனவுநிலை அல்லது ஆன்மா, பிரபஞ்ச சக்தியுடன் இணைதல் என்று அர்த்தம். யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. யோகா என்பதைப் பலர், உடல் வளைதல், திரும்புதல், நீட்டுதல், மூச்சினை எடுத்து விடுதல் என சிக்கலான உடற்பயிற்சி என்று நினைக்கக்கூடும், இவையனைத்தும், உள்ளிருக்கும் மனித மனதின் ஆன்மாவின் எல்லையற்ற சக்தியைத் திறந்து திறனை அதிகரிக்கும் ஆழமான அறிவியலைப் பற்றிய மேலோட்டமான கருத்துகள்.

யோகா என்பதே, தன்னுள் எப்படி வாழ வேண்டுமெனும் வாழ்க்கையின் சாரத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அறிவியல் ஆகும்ஞான யோகம்ஞான தத்துவ மார்க்கம், பக்தி யோகம்பக்தி வழியில் பேரின்பம், கர்ம யோகம்செயல்களின் பாதை, ராஜ யோகம்மனதைக் கட்டுக்குள் வைக்கும் மார்க்கம். ராஜ யோகம், எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ராஜ யோக அமைப்பின் மையப்பகுதி என்பது, இவை அனைத்தையும் பல வழிகளில் சமன் செய்து இணைக்கும் யோக ஆசனப் பயிற்சியாகும்

parvathi tapas for shiv க்கான பட முடிவு 

5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர்கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர்.
mahaperiyava க்கான பட முடிவு

 

யோகா பலன்கள்:

முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்க இயலும். வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். நேரடியாக தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ’டிவி’ பார்த்து செய்தால் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு உள்ளது. முறையாக செய்வதன் மூலம் பல அற்புத பலன்களை பெற இயலும்.

 

யோகப் பயிற்சியின் மூலம் உடற்தகுதியினை உடல் நலத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

 

இளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல் நோய்களை வராமல் தவிர்க்கலாம். ரத்தஓட்டத்தை சீராக வைக்க உதவும். எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும். முன்னால் குனியும் ஆசனங்கள் மூலம் மூளைக்கு முறையாக ரத்தஓட்டத்ததை செலுத்தி, பிராணவாயு அதிகமாக உட்செலுத்தி நீண்ட ஆயுளையும், ஞாபக சக்தியையும் பெருக்க முடியும்.

உளவியல் ரீதியாக மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.