Siva Narthanam

சிவ நர்த்தனம்

நந்தியின் மேல் நர்த்தனம்…
பந்தம் விடுக்கும் நர்த்தனம்…

மாலை நேர நர்த்தனம்..பிரதோஷ.மாலை நேர நர்த்தனம்..

காலைத் தூக்கி நர்த்தனம்… ஒரு
காலைத் தூக்கி
நர்த்தனம்..

கொம்பு நடுவில் நர்த்தனம்.. நந்தியின்
கொம்பு நடுவில் நர்த்தனம்…

வம்பு தீர்க்கும் நர்த்தனம் நம் மன வம்பு தீர்க்கும் நர்த்தனம்…

வித்தகன் ஈசனின் பத்துகை நர்த்தனம்..

சொத்துதென உள்ள நர்த்தனம்.. நம் மன சொத்து என உள்ள நர்த்தனம்…

தகதிமி தகிட தகதகிட தகிடதகதிமி தகதிமிதகதகிட என்று பல ஐதிக்கு ஆடும் நர்த்தனம்

தகவுற மகிழ்வுற அறத்துடன் நாம் வாழ மால் அவன் மார்பில் அயன் அவன் தாளமிடவே
அரன் அவன் உலகுக்கு ஆடும் நர்த்தனம்…

நந்தியின் மேல் நர்த்தனம்….
நந்தியின் மேல் நர்த்தனம்…
நர்த்தனம்..
ந..ர்..த..த..ன..ம்….