Charanam Iyyappa

பல்லவி

கல்லையும் முள்ளையும் காலுக்கு மெத்தையாக்கினாய்

                                (சாமி ஐயப்பா) (சரணம் ஐயப்பா)

தொல்லையும் துன்பமும் நீயே போக்கினாய்

                                (சாமி ஐயப்பா) (சரணம் ஐயப்பா)

வில்லையும் வெற்றியும் கொண்டு எமை காப்பாயே

     சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

அல்லல்கள் ஆசைகள் நீக்குவாய் போக்குவாய்

     சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

அன்புருவே ஆனந்த ரூபனே இன்முகம் காட்டுவாய்

     சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

வம்புகள் தும்புகள் வராமல் காத்தருள்

     சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

வேலேந்திய முருகனின் சோதார வந்தருள்வாய்

     சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

காலனை கடிந்தவன் தனிப்பெரும் பிள்ளையே

     சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா

பல்லவி

ஐயப்பா ஐயப்பா சரணம் அப்பா ஐயப்பா

ஐங்கரனின் சோதரா சரணம் அப்பா ஐயப்பா

அனுபல்லவி

கட்டுப்பாடு பல உள்ள சாமியே ஐயப்பா

காப்பாற்ற வேண்டுமே சாமியே ஐயப்பா

சரணம்

கார்த்திகை மாதம் விரதமேற்றோம் உன்னைக்காண

காலமெல்லாம் காத்திருந்தோம் உன்னைக் காண

கீர்த்தி பல உடையவா சாமி ஐயப்பா

போற்றி உன்னை பாடுகின்றோம் சாமி ஐயப்பா