https://youtu.be/spG0VGqTAkk
Andal an avatara of Sri Bhooma Devi composed Thiruppavai and Nachiyar Thirumozhi and Prof Dr V V Meenakshi Jayakumar explains the same in simple Tamil.
Andal Naachiyar Thiruvadigale Charanam
Articles on music, spirituality, self development and humor
https://youtu.be/spG0VGqTAkk
Andal an avatara of Sri Bhooma Devi composed Thiruppavai and Nachiyar Thirumozhi and Prof Dr V V Meenakshi Jayakumar explains the same in simple Tamil.
Andal Naachiyar Thiruvadigale Charanam
வள்ளி கணவன் பேரை
ஆளும் பாதி ஆடை பாதி
என்பது ஆன்றோர் வாக்கு
ஆடைகளில் பல விதம் உண்டு – கிளியே
பாட்டில் அதை சொல்வோம் கேளு – கிளியே
பருத்து நூலு பட்டு நூலு
பல ரக நூலும் இருக்கு
விருப்பபபட்டு அணிந்து பாரு – இதுல
நல்ல சுகம் தானே இருக்கு – கிளியே
காசி பட்டு காஞ்சி பட்டு
ராசி பட்டு செட்டி பட்டு
அப்பப்பா பல ரக பட்டு – கிளியே
சிறப்பான சின்னாளம் பட்டு – கிளியே
பாட்டில் இருக்கு பல இராகம்
பட்டில் இருக்கு பல வகைகள்
பாட்டில் இருக்கு பல வகை ராகம்
திருமண பட்டு ஒரு ராகம் – கிளியே
சீமந்த பட்டு ஒரு ரகம்
தொட்டில் கட்டும் சேலை ஒரு ரகம்
தொட்டில் பாட்டின் இராகம் ஒரு ரகம் – கிளியே
பாட்டில் இருக்கு பல இராகம்
பட்டில் இருக்கு பல வகைகள்
பாட்டில் இருக்கு பல வகை ராகம்
பல்லவி
வருக வருகவே அனைவரும் வருகவே
பருக பருகவே தமிழிசை அமுதம்
அனுபல்லவி
எண்பதாம் இசைவிழா தமிழ் இசைச் சங்கத்தில்
பண்களின் ஆராய்ச்சி இராஜா அண்ணாமலை மன்றத்தில்
தமிழ் இசைச் சங்கத்தில் வருக
சரணம்
சந்தமிகு செந்தமிழ் பாடல்கள் ஆடல்கள்
பண்ணிற்கு இணையான இராகத்தின் தேடல்கள்
தன்னிகர் இல்லாத தமிழ் இசை ஓங்குக
இன்பமிகு இன்னிசை அனைவரும் பாடுக
……… வருக
–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
பல்லவி
அருணோதயம் வருகவே வருக
இருள் அது நீங்கி நல்ஒளி பரவ – அருணோதயம்
அனுபல்லவி
தருமம் பெருக நல்வாழ்வு சிறக்க
பெருமை அது பொங்க பேதமை நீங்க – அருணோதயம்
சரணம்
அரும்பணி பல செய்ய ஆத்ம பலம் உயர
ஆருயிர் அனைத்தும் அன்புடன் திகழ
இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழ – இனி
வரும் நாட்களில் அமைதியும் வளர – அருணோதயம்
–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
அன்னை கங்கை நதி போற்றி
ஆனந்த சிவன் தலை அமர்ந்தாள் போற்றி
இளமை முருகனின் தாய் போற்றி
ஈரேழு உலகின் உயிர் போற்றி
உள்ளத்தில் நினைத்தாலே உடல் தூய்மை தருபவள் போற்றி
ஊரி ஒலிக்கும் வழிபாடு கொண்டாய் போற்றி
எப்போதும் வற்றாத நதி போற்றி
ஏழு தவம் செய்த பகீரதனுக்கு அருள் சுரந்தாய் போற்றி
ஐசுவரியம் அளிக்கும் அன்னை நீயே போற்றி
ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை கொண்டாய் போற்றி
ஒரு அய்யாவாள் கிணற்றில் வந்தருள் தந்தாய் போற்றி
ஓங்கார ஒலிகொண்ட மொழியாய் போற்றி
ஔவை தெய்வம் முருகனின் பக்தர்
முத்துஸ்வாமி தீஷிதருக்கு வீணை அளித்தாய் போற்றி
— பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
அன்றும் இன்றும் என்றுமுள்ளது இசை
ஆரவாரமில்லாமல் அமைதியாய் ஒரு மின்னிதழ்
இசை ஆரம் என்ற பெயர் கொண்ட இம் மின்னிதழ்
ஈசன் அருளாலும் ஆன்றோர் ஆசியாலும்
உலகெலாம் சென்று இசை ஆய்வு செய்வோரை
ஊக்குவித்து புதிய புதிய ஆராய்ச்சிகள் மலரவும்
எண்ணத்திலும் எழுத்திலும் இசை நடன சார் எழுச்சியும் எழ
ஏற்றமான பங்களிப்பு அளித்திடும் இசை ஆரம் என்பதில்
ஐயமில்லை ஐயமில்லை ஐயமேயில்லை
ஒருமருந்தாம் இவ்வுள்ளத்திற்கும் உணர்விக்குமானது இசை
ஓங்கார பரமன் வடிவான இசையை பயில்வோம்
ஔவைத்தமிழின் இசையை இசை ஆரத்தில் வாசித்து பயன் பெறுவோம்.
பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
மங்களம்
அன்னை அபிராமிக்கு ஆயிரம் மங்களம்
அமிர்தகடேஸ்வர்க்கு அன்பான மங்களம்
கள்ள வாரண கணபதிக்கு கரும்பு கொண்டு மங்களம்
வள்ளி தேவானை நாயகன் முருகனுக்கு மங்களம்
எமதர்ம ராஜனுக்கு எப்போதும் மங்களம்
எங்குல சாமிக்கு இப்போது மங்களம்
மாயா முனிவரான மார்க்கடேயருக்கு மங்களம்
தேவார மூவருக்குத் தமிழிசையில் மங்களம்
காரிநாயனார் அவர் திருத்தமிழுக்கு மங்களம்
குங்கலிய நாயனார் திருப்பணிக்கு மங்களம்
அபிராமி பட்டருக்குப் பக்தியாலே மங்களம்
தூய அன்பு வடிவான அனைவருக்கும் மங்களம்
PROF. DR. V.V.MEENAKSHI JAYAKUMAR
குருஞானசம்பந்தர் – தருமைஆதினம்
அமுதகடேஸ்வரர் வாழி வாழி
அன்னை அபிராமி வாழி வாழி
கள்ள வாரண கணபதி வாழி
வள்ளிக் கணவன் முருகன் வாழி
எமதர்ம ராஜன் எப்போதும் காக்க
மாயா முனிவர் மார்க்கண்டேயர் வாழ்க
தேவார மூவரின் தெய்வத்தமிழ் வாழ்க
குங்கலியக் கலய நாயனார் வாழ்க
காரி நாயனார் வாழ்க
அபிராமி பட்டரின் அந்தாதி வாழ்க
தருமை ஆதினம் புகழும் ஓங்குக
PROF. DR. V.V.MEENAKSHI JAYAKUMAR
அபிராமி பட்டர், அபிராமி அந்தாதி
அன்னையே அபிராமி
ஆனைமுகனின் அன்னையே அபிராமி
இளமை முருகன் தாயே அபிராமி
ஈசனின் உயிரே அபிராமி
உலகீன்ற தாயே அபிராமி
ஊக்கம் தருவாயே அபிராமி
எங்கள் அன்னையே அபிராமி
ஏற்றம் தருவாயே அபிராமி
ஐயன் பட்டரின் தெய்வமே அபிராமி
ஒரு நிலவு தந்தாயே அபிராமி
ஓராயிரம் பெயர்க் கொண்டவளே அபிராமி
ஔடதம் நீ எமக்கு எங்களின் தாயே அபிராமி
Prof. DR. V.V.Meenakshi Jayakumar
இருளை ஒளி ஆக்குபவள் அபிராமி – மன
இருளைப் போக்குபவள் அபிராமி
ஈசனில் பாதி அவள் அபிராமி
உலக உயிர்களின் உயிரவள் அபிராமி
அகிலாண்ட நாயகி அவள் அபிராமி
அவளை நாடிச் செல்வோம் நாம் வாரீர் வாரீர்
Prof. Dr. V.V. Meenakshi Jayakumar