
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
பல்லவி
ஆடுவோமே பள்ளு பாடுவோமே – நாம்
அனைவரும் தடுப்பூசி போட்டு விட்டோம் என்று – ஆடுவோமே
அனுபல்லவி
எங்கும் கொரோனா என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் பயப்பட வேண்டியதாச்சு
தடுப்பூசி என்பது தடுப்பதற்கே அது போல்
முகக்கவசம் கூட அவசியமே..
சரணம்
முகச் சுத்தம் கைச் சுத்தம் பேணிக் காப்போம் – நாம் (2)
அடிக்கடி கைகளை சுத்தம் செய்வோம்
கூட்டமுள்ள இடங்களுக்கு செல்ல மாட்டோம்
தேவையின்றி வெளியில் வர மாட்டோம்
நாமிருக்கும் இடத்தை சுத்தமாய் வைப்போம்
அதைப் போல் மற்றவருக்கும் உதவிடுவோம்
தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்போம்
கொரோனா இல்லாத தேசத்தில் வாழ்ந்து காட்டுவோம்
Prof. V. V. Meenakshi Jayakumar