Tag: avvaiyar
Vinayagar Agaval
Go to temple – Visit a temple – Daily Routine.
பல்லவி
கோயில் வாசல் வருவேனோ? – உன் திருக்
கோயில் வாசல் வருவேனோ?
அனுபல்லவி
தாயின் சொல் கேளாய் பிள்ளையாய் வளர்ந்தேன்
நோய் நொடி தாக்கி மூப்பு வரும் முன்னே – கோயில் வாசல்
வருவேனோ?
சரணம்
வாயில் வந்து நின்றால் போதும் நாயேன் வாழ்வு கடைத்தேறும்
போயும் போயும் இந்த இழி பிறவி வேண்டவே வேண்டாம். – இனி
சாயும் இவ்வுடல் கொண்டு சதானந்தன் அடி பணிந்து
தீயில் வேகும் வரை நின் நினைப்பொன்றே போதும் போதும்
Prof.V.V.Meenakshi Jayakumar
திருக்குறள்
திருக்குறள்
![]()
அகர முதல என்ற ஆரம்பிப்பது திருக்குறள்
ஆதி பகவன் புதல்வன் எழுதியது திருக்குறள்
இகபர சுகங்களை அறிய வைப்பது திருக்குறள்
ஈதலின் சிறப்பை எடுத்துக் கூறுவது திருக்குறள்
உலகப் பொதுமறையென போற்றப்படுவது திருக்குறள்
ஊடலையும் கூடலையையும் பற்றி உணர்த்துவது திருக்குறள்
எல்லா சமயத்தாருக்கும் நன்று சொல்வது திருக்குறள்
ஏழ்பிறவிக்கும் ஒரு அருமருந்தாவது திருக்குறள்
ஐயம் திரிபுற அனைத்துமாய் திகழ்வது திருக்குறள்
ஒப்புயர்வு இல்லாத ஒரு சிறந்த குறள் திருக்குறள்
ஒழுக்கத்தின் மேன்மையை போதிப்பது திருக்குறள்
ஓ இதுவே தமிழ்வேதம் என்று போற்றம்படுது திருக்குறள்
ஓதி உணர்ந்து செயல்படுத்த வேண்டியது திருக்குறள்
ஔவையால் தேவர்குறள் என போற்றப்பட்டது திருக்குறள்.
—-Prof. V.V.Meenakshi Jayakumar