நாலாயிரம்

பல்லவி
நாலாயிரம் நம் சொத்து
நாலாயிரம் நம் சொத்து
– நாலாயிரம் நம் சொத்து

அனுபல்லவி
பாலாயிரம் வேண்டாம்
நாலாயிரம் போதும்
மாலாயிரம் நாமம் தரும்
நாலாயிரம் போதும்
– நாலாயிரம் நம் சொத்து

சரணம்
அன்புடன் இராமானுஜர் நமக்கு தந்த சொத்து
ஆர்வமுடன் சேவித்தால் நமக்கு இல்லை பத்து
இகபர சுகத்திற்கெல்லாம் பிரபந்தம் ஒன்றே வித்து
ஈசனவன் பாடும் நாலாயிரம் நாம் அணிகின்ற முத்து

—-பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

விநாயகார் பாட்டு

பல்லவி
வரணும் வரணும் விநாயகா
சரணம் சரணம் விநாயகா
அருள வரணும் விநாயகா
பரம கருணை வடிவானவா

அனுபல்லவி
வந்தி பிட்டுக்கு சென்ற தந்தையின் வரபுதல்வா நீ
குந்தி வீட்டுக்கு சென்ற கண்ணனின் மனம் நிறைந்தவா
– வரணும் வரணும்

சரணம்
குழந்தைகளின் தெய்வம் நீயே
பெரியோர்களின் தெய்வம் நீயே
தேவர்களின் தெய்வம் நீயே
விஜய் மீனாட்சியின் தெய்வம் நீயே
– வரணும் வரணும்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி

கண்ணன் பாட்டு

பல்லவி
எம்பிரான் கண்ணனயே என் மனம் பாடுமே
எம்குறை தீர்ப்பவனின் பதத்தையே பாடுமே
-எம்பிரான்

அனுபல்லவி
தம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டவன் கண்ணன்
அம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டன் கண்ணன்

சரணம்
அம்பரமும் தண்ணீரும் அவனது படைப்பு
அதில் ஒட்டாமல் வாழ்வது அவனது சிறப்பு
அனைத்திற்கும் ஆதாரம் அவன் அதிலேது மறுப்பு?
அவன் அருள் பாடுகிறேன் இதிலென்ன வியப்பு?
– எம்பிரான்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

கண்ணன் பாட்டு

பல்லவி
ஆலிலைமேல் பள்ளி கொண்டாய் கண்ணா கண்ணா
-நீ ஆலிலைமேல் என்மன

அனுபல்லவி
என் மனத் துளியிலே பள்ளி கொள்ள வருவாய் கண்ணா கண்ணா
மாலியாக வருவாயே என் கண்மணி கண்ணா

சரணம்
உன் கையில் புல்லாங்குழல் என் மனம் ஆகவே
உள்ஒன்றும் இல்லாமல் இருப்பது சுகமே
புள்ளின் மேல் வருவாய் என் குறை தீர்ப்பாய்
என் கருத்திலும் கண்ணிலும் நிறைந்தவன் நீ தானே
– ஆலிலைமேல்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

முருகன் பாட்டு

பல்லவி
மனமே மனமே அமைதி கொள்வாய்
மனத்துக்கினிய மருத்துவன் முருகன் உள்ளான்
-மனமே மனமே

அனுபல்லவி
தினமே தினமே அவன் புகழ் பாடு
தினகரனாய் வருவான் நம் பிழை பொறுப்பான்
– மனமே மனமே

சரணம்
முருகன் குமரன் குகன் என்று பாடு
வருவான் மயில் மேல் நம் குறை தீர்க்க
அருளும் தருவான் அன்பும் தருவான்
இருளும் களையும் ஒளியுடன் வாழ
– மனமே மனமே

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

முருகன் பாட்டு

பல்லவி
கந்தனே உனை நான் அழைக்கின்றேன்
சுந்தரனே நீ உடனே வா வா வா
– அழகு

அனுபல்லவி
சந்ததமும் நான் தொழுகின்றேன் – உனை
வந்தனை செய்தே நான் வாழ்கின்றேன்
– அழகு

சரணம்
ஆனைமுகன் சோதரனே அழகு தெய்வமே
ஊனை உருக்கும் தமிழ் இசை நாயகனே
ஏனைய தெய்வங்கள் இருந்தாலும் – சுட்ட
பானைபோல் வினையை நீக்கிடும் – அப்பா
– அழகு

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

Thiruppavai 1 Margazhi Thingal…

https://youtu.be/spG0VGqTAkk

Andal an avatara of Sri Bhooma Devi composed Thiruppavai and Nachiyar Thirumozhi and Prof Dr V V Meenakshi Jayakumar explains the same in simple Tamil.
Andal Naachiyar Thiruvadigale Charanam

ஆடை – நூல்

வள்ளி கணவன் பேரை

ஆளும் பாதி ஆடை பாதி
என்பது ஆன்றோர் வாக்கு
ஆடைகளில் பல விதம் உண்டு – கிளியே
பாட்டில் அதை சொல்வோம் கேளு – கிளியே

பருத்து நூலு பட்டு நூலு
பல ரக நூலும் இருக்கு
விருப்பபபட்டு அணிந்து பாரு – இதுல
நல்ல சுகம் தானே இருக்கு – கிளியே

காசி பட்டு காஞ்சி பட்டு
ராசி பட்டு செட்டி பட்டு
அப்பப்பா பல ரக பட்டு – கிளியே
சிறப்பான சின்னாளம் பட்டு – கிளியே

பாட்டில் இருக்கு பல இராகம்
பட்டில் இருக்கு பல வகைகள்
பாட்டில் இருக்கு பல வகை ராகம்
திருமண பட்டு ஒரு ராகம் – கிளியே
சீமந்த பட்டு ஒரு ரகம்
தொட்டில் கட்டும் சேலை ஒரு ரகம்
தொட்டில் பாட்டின் இராகம் ஒரு ரகம் – கிளியே
பாட்டில் இருக்கு பல இராகம்
பட்டில் இருக்கு பல வகைகள்
பாட்டில் இருக்கு பல வகை ராகம்

தமிழ் இசைச் சங்கம் – எண்பதாம் இசைவிழா

பல்லவி
வருக வருகவே அனைவரும் வருகவே
பருக பருகவே தமிழிசை அமுதம்

அனுபல்லவி
எண்பதாம் இசைவிழா தமிழ் இசைச் சங்கத்தில்
பண்களின் ஆராய்ச்சி இராஜா அண்ணாமலை மன்றத்தில்
தமிழ் இசைச் சங்கத்தில் வருக

சரணம்
சந்தமிகு செந்தமிழ் பாடல்கள் ஆடல்கள்
பண்ணிற்கு இணையான இராகத்தின் தேடல்கள்
தன்னிகர் இல்லாத தமிழ் இசை ஓங்குக
இன்பமிகு இன்னிசை அனைவரும் பாடுக
……… வருக

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

கீர்த்தனை

பல்லவி
அருணோதயம் வருகவே வருக
இருள் அது நீங்கி நல்ஒளி பரவ – அருணோதயம்

அனுபல்லவி
தருமம் பெருக நல்வாழ்வு சிறக்க
பெருமை அது பொங்க பேதமை நீங்க – அருணோதயம்

சரணம்
அரும்பணி பல செய்ய ஆத்ம பலம் உயர
ஆருயிர் அனைத்தும் அன்புடன் திகழ
இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழ – இனி
வரும் நாட்களில் அமைதியும் வளர – அருணோதயம்

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்